N.நாகராஜன்
இணைச்செயலாளர், ICEU
இணைச்செயலாளர், ICEU
சுதந்திர இந்தியாவில் மக்களின் சேமிப்பை
அர்த்த சாஸ்திரத்திலும் கண்டிராத வகையில் பல வழிகளில் மோசடியில் ஈடுபட்டு
கொள்ளையடித்துக் கொண்டிருந்தன தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள். 200க்கும் மேற்பட்ட
இத்தகைய நிறுவனங்களை பண்டித நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு தேசியமயமாக்கி ரூ.5
கோடியில் 1956ல் துவக்கப்பட்ட நிறுவனம் தான் எல்.ஐ.சி.
கடந்த 56 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்புடன்
வளர்ச்சிப்பாதையில் பீடு நடைபோட்டு 30 கோடிக்கும் மேலான பாலிசிதாரர்களைத்
தன்னகத்தே கொண்டு ரூ.13 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் நெ.1, நிறுவனமாக
திகழ்கிறது எல்.ஐ.சி. நாட்டின் ஐந்தாண்டு திட்டங்களுக்காக ரூ.11.75 இலட்சம்
கோடிகளையும், அரசு மற்றும் சமூக நல (குடிநீர், சாலைவசதி போன்ற)
திட்டங்களுக்கு ரூ.7.50 இலட்சம்
கோடிகளையும் அள்ளித் தந்துள்ளது எல்.ஐ.சி. ஒரு லட்சம் ஊழியர்கள், 13.25 இலட்சம்
முகவர்களின் தன்னலமற்ற சேவையால் வளர்ந்துள்ள பொதுத்துறை எல்.ஐ.சி._ஐ ஏகாதிபத்திய
நிதி மூலதனத்தின் நெருக்குதலால் தனியாருக்குத் தாரை வார்க்க முயல்கிறது மன்மோகன்
சிங் அரசு.
முந்தைய பாஜக மற்றும் காங்கிரஸ் அரசினால்
இன்சூரன்ஸ் துறையில் போட்டி என்ற பெயரில் 26% அந்நிய முதலீட்டுடன் தனியார்
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படத் துவங்கின. 24 தனியார் நிறுவனங்கள் இன்சூரன்ஸ்
துறையில் நுழைந்தபோதும் பொருளாதார மந்த நிலையிலும் 2011_12ல் ரூ.2,03,358 கோடியை
பிரீமியமாகப் பெற்று பாலிசி எண்ணிக்கையில் 81% சந்தை பங்களிப்பை (ஙஹழ்ந்ங்ற்
ள்ட்ஹழ்ங்) பெற்று முன்னோடி நிறுவனமாக எல்.ஐ.சி. விளங்குகிறது.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா