Tuesday 25 December 2012

குற்றம் - சட்டம் என்ன சொல்கிறது?



கிரைம் ஸ்டோரி

பிரேம் N.பிரேமராசன் B.Sc., B.L., 450/F159, QC-Lab

      சட்டப்படி குற்றம் என்றால் என்ன? என்ன வகைகள்? உட்பிரிவுகள் என்ன? குற்றத்தில் எவை முக்கியமானது? இந்தியன் பீனல் கோட் (ஐபிசி) படி அதன் வகைகள் என்ன என்பதை இங்கு காண்போம்.
      கிரைம் என்றால் சட்ட நூல்படி அது பொது தவறு (பப்ளிக் ராங்) ஆகும். கொலைக்குற்றம் என்று எடுத்துக் கொண்டால், (1) கத்தியால் கொல்வது, அல்லது விஷம் கொடுத்துக் கொல்வது (2) உணவு கொடுக்காமல் கொல்வது என இரு வகை.

      பொதுவாக குற்றத்தில் கீழ்க்கண்ட வகைகள் இருக்க வேண்டும்.
குற்றத்தின் தேவைகள் (எசன்ஷியல் ஆப் கிரைம்): (1) மனித ஈடுபாடு
(2) மென்ஸ்ரியா விருப்பம் (மென்ஸ் ரியா இன்டென்ஷன்)
(3) குற்றச்செயல் (ஆக்டஸ் ரியுஸ்) (4) அடிபடுதல் (இன்ஜூரி- பாடி மைன்ட்) (5) அதிலும் பொதுவாக கொலைக்குற்றத்தில் விருப்பம் இருக்க வேண்டும். அது இருந்தால்தான் அது குற்றம்.
      உதாரணம் ஒருவரை மற்றொருவர் கத்தியால் குத்துகிறார். அங்கு மென்ஸ் ரியா குற்றம் உள்ளது. மற்றொரு உதாரணம் ஒருவர் ஒரு பறவையைச் சுடுகிறார். ஆனால் அது பறவை மீது படாமல் மனிதன் மீது பட்டு அவர் உயிர் இழக்கிறார். இங்கு மென்ஸ் ரியா கிடையாது. இது விபத்து (நோ கிரைம்).
      ஐபிசி - 1860 படி குற்றங்களின் வகைகள் (1) மனிதனுக்கு எதிரான குற்றம் - கொலை, கற்பழிப்பு (2) சொத்துக்கு எதிரான குற்றம் - திருட்டு, கொள்ளை, கூட்டுக்கொள்ளை (3) திருமணத்திற்கு எதிரான குற்றம் - இரண்டாவது திருமணம், கள்ள உளவு (4) அரசுக்கு எதிரான குற்றம் - போர், உளவு (5) பொதுமக்களுக்கு எதிரான குற்றம் - சட்ட விரோதமாக கூடுதல் (6) இதர குற்றங்கள் - கள்ள நோட்டு, நாணயம் அடித்தல். (7) மற்ற குற்றங்கள் - திருட்டு எடை, அளவீடுகள்.
      மேற்கூறிய குற்றங்கள் அனைத்திற்கும் ஐபிசி படி குற்றங்களுக்கு ஏற்றாற்போல் தண்டனைகள் கிடைக்கும். (1) தூக்கு
(2) ஆயுள் (3) சிறை - சாதாரணம் (4) கடுஞ்சிறை (5) சொத்து பறிமுதல் (6) அபராதம்.
      ஆக சட்டம் என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது. குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் (எவிடென்ஸ் ஆக்ட், 1872 படி). குற்றவாளி தண்டிக்கப்படாமல் போகலாம், தப்பிக்கலாம். ஆனால் நிரபராதி கண்டிப்பாக தண்டிக்கப்படக் கூடாது.
      அடுத்த இதழில் தொடர்வோம். புத்தாண்டு 2013, பொங்கல் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா