Saturday 13 October 2012

விவாகரத்து (Divorce) சட்டம்



பிரேம் N.பிரேமராசன் B.Sc., B.L., 450/F159, QC-Lab

கணவன் - மனைவி இருவரும் கடைசி வரை சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும். இருப்பினும் சூழ்நிலை காரணமாக விவாகரத்து தவிர வேறு வழியில்லை என்கிற போது விவாகரத்து சட்டம் என்ன சொல்கிறது என்ற தேடல் எழுகிறது.

      பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை

      காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

      மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை

      சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

இப்பாடல் வரிகளில் வருவது போல மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை. பல காரணங்களால் பிரிய நேரிடுகிறது. சட்டப்படி விவாகரத்து மூலம் அவர்கள் பிரிகின்றனர். விவாகம் + ரத்து = விவாகரத்து. விவாகம் என்பது திருமணம். அப்படி நடந்த திருமணத்தை கோர்ட் மூலம் ரத்து செய்வதே விவாகரத்து ஆகும். இந்து குடும்ப சட்டப்படி விவாகரத்து இரண்டு பிரிவுகளில் செய்யலாம். ஒன்று செக்ஷன் 13 - ஊஹம்ண்ப்ஹ் கஹஜ் மற்றொன்று செக்ஷன் 13ஆ ஊஹம்ண்ப்ஹ் கஹஜ்.

      செக்ஷன் 13 என்பது கணவன் மனைவியில் ஒருவர் விவாகரத்து கோருவது. மற்றொருவர் சேர்ந்து வாழ்கிறேன் என்று சொல்வது. இதில் இரு தரப்பு வாதங்களையும், சாட்சிகளையும், காரணங்களையும் வைத்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. செக்ஷன் 13ஆ என்பது கணவன் மனைவி இருவரும் முன்வந்து ஒப்புதல் தந்து தங்களுக்கு விவாகரத்து வேண்டும் (ஙன்ற்ன்ஹப் இர்ய்ள்ங்ய்ற்) என்ற முடிவுக்கு வருவது. இதற்கு கணவன் மனைவி இருவரும் ஒரு வருடம் பிரிந்திருக்க வேண்டும். இருவரின் கருத்தும் விவாகரத்து வேண்டும் என்ற முடிவில் இருக்க வேண்டும். இதன்படி இருவரும் விவாகரத்து கோரி மனு அளித்தால் 13ஆ படி நீதிபதி கால தாமதமின்றி தீர்ப்பு கொடுப்பார். பணம் விரயம் ஆகாது. விவாகரத்து வேண்டுமா? ரூ.20,000\- கொடு, ரூ.30,000\- கொடு என்ற பேரம் இருக்காது.

      விவாகரத்துக்கான (எழ்ர்ன்ய்க்ள்) காரணங்கள் என்ன? (1) கலப்படம் (அக்ன்ப்ற்ழ்ஹ்) மனைவியைத் (கணவனைத்) தவிர வேறு தொடர்பு (2) கொடுமை (இழ்ன்ங்ப்ற்ஹ்) அடித்தல், காயப்படுத்துதல், மூளை பாதிப்பு ஏற்படுத்துதல்

(3) ஈங்ள்ங்ழ்ற்ண்ர்ய் - காரணம் இன்றி 2 வருடம் பிரிந்து போதல் (4) பைத்தியம்

(5) குஷ்டம் - 3 வருடம் குணமாகாத நோய் (6) ய.ஈ. - மூன்று வருடமாக

(7) ஏழு வருடமாக எங்கு இருக்கிறார் என்று அறிய முடியவில்லை. இவையே விவாகரத்துக்குரிய அடிப்படைக் காரணங்கள்.

      சட்டப்படி பிரிவும், விவாகரத்தும் வேறுபட்டது. இதற்கு ஒன்க்ண்ஸ்ரீண்ஹப் நங்ல்ங்ழ்ஹற்ண்ர்ய் என்று பெயர். ஆண்மை குறைவு காரணம் விவாகரத்தில் வராது. கண்டிப்பாக பிரிந்து விடலாம்.

      இலவச கோர்ட் மூலமும் விவாகரத்து கோரலாம். தேவைப்பட்டால் தலைமை நீதிபதிக்குக்கூட இலவச சட்ட உதவி கேட்டு எழுதலாம். முஸ்லீம் சட்டம் இதில் இருந்து சற்று மாறுபட்டது.

      சட்டங்கள் இருந்தாலும், நண்பர்களே... கணவன் மனைவி இருவரும் கருத்தொருமித்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா