Healer R.மாதவன்
D.E.C.E., M.Acu., அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவ ஆலோசகர், செல்: 9840732871 - 353\37026
`அக்குபங்சர் சிகிச்சை இல்லம்' சார்பாக அக்குபங்சர்
சிகிச்சையைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அக்குபங்சர் மருத்துவம் என்பது கடல் அல்ல! காற்று..!
காற்றானது உலகம் முழுதும் எவ்வாறு வியாபித்து உள்ளதோ, அதேபோல் நமது உடல் முழுதும் அக்குபங்சர்
புள்ளிகள் பரவியுள்ளது. இதில் சக்தி குறைந்த புள்ளிக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் அனைத்து
நோய்களிலிருந்தும் முழுவதும் குணம் அடையலாம்.
அக்குபங்சர் சிகிச்சை என்பது மெல்லிய ஊசி அல்லது
கைவிரல் கொண்டு நமது உடம்பில் தோன்றக்கூடிய அனைத்து விதமான நோய்களையும் அதன் மூலக்
காரணங்களையும் நீக்கி, மேலும் நோயே வராமல் இருப்பதற்கான வாழ்க்கை அறிவியலை உணர்த்தும்
முழுமையான மருத்துவமாகும்.
உடம்பிலுள்ள ஐந்து ராஜ உறுப்புகள் என்றும், பஞ்சபூத
உறுப்புகள் என்றும் அனைத்து மருத்துவங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இருதயம், மண்ணீரல்,
நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை அக்குபங்சர் நாடிப் பரிசோதனை மூலம்
பரிசோதித்து, உடம்பிலுள்ள மூன்றுவித சக்தி நிலைகளான
1. நோய் எதிர்ப்பு சக்தி
2. ஜீரண சக்தி
3. உடல் இயக்க சக்தி
ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை சமமாக்குவதே இந்த
சிகிச்சையின் சிறப்பம்சமாகும்.
நம் உடல் நோய்க்கு முக்கிய காரணம் இயற்கை விதிமீறலே.
இவற்றைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா