Saturday 17 August 2013

உரிமைக்குரலே உனக்கு நிகர் யாருமில்லை

எஸ்.கெஜராஜ், 375 / K 700 Mechatronic

பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து
பத்தாமாண்டில் வீர நடைபோடு...!
நிரந்தரமாய் வாசகர் நெஞ்சை எடைபோடு...!
தொழிற்சங்க தலைவர்கள் கருத்துகளோ தெளிவோடு...!
வழிகள் பிறந்தன பல கலந்தாய்வு கருத்தோடு...!
முகநூலின் மூலம் பல குறிப்புகள் முகவரியோடு...!
அகத்தினை பேணிப் பாதுகாக்க மருத்துவர் அறிவுரையோடு...!
அறிவியல் புதுமைகளை அறிவித்தாய் வியப்போடு...!
அரசியலோ; உலகவியலோ; புகுத்திய புள்ளிவிவரத்தோடு...!
சங்கச் செய்தியோ; மற்ற நிறுவன செய்தியோ வெளியிட்டாய் முறையோடு...!
கவிதையோ, சிறுகதையோ மனதைத் தொடும் நெகிழ்வோடு...!
உரிமைக் குரலே..! உனக்கு நிகர் யாருமில்லை...! துணிவோடு...!
உன்னை வாழ்த்துவதில் பெருமையடைகிறேன் அன்போடு...!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா