Tuesday 15 October 2013

இசையால் வளமாகும் ஆளுமைத் திறன் - பாகம் 14

ஜோ.சுரேந்திரன்

உரிமைக்குரல்: இசை கற்பித்தல் முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்து செயல்படுவது போல் தோன்றுகிறது. கால மாற்றத்தில் இதைத் தவிர்க்க முடியாதா?
JS: ஏன் தவிர்க்க வேண்டும்? இசைக்கு இடையூறு நேரா வண்ணம் தொழில்நுட்பம் கட்டாயம் தேவை. Mono-Stereo-Dolby-Atmos போன்ற ஒலிநுட்பங்களும், Orchestration - Orchestra - Studio ஆகியவற்றிலிருந்து சுருங்கி வீடே Studio-வாக மாறும் நிலையும் வந்துவிட்டது. ஆனால், எங்கே ஆத்மார்த்தமான இசையைத் தொலைக்கிறோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். குரு-சிஷ்ய பாரம்பரியம் தொலைவது நல்ல இசைக்கு அழகல்ல!

இசை கற்பித்தல் - தொழில் நுட்பத்தோடு இணைந்து இருத்தல் மிக முக்கியம். தொழில்நுட்பமும், இசையும் 50:50 இருப்பது மிக அவசியம். Soulful-Approach நல்ல சங்கீதத்தை வெளிக் கொணர்வதற்கு முக்கிய பங்காற்றுகிறது.
      You-tube இசை கற்றுக் கொடுக்க முடியாது. சிறந்த ஆசிரியரே ஒப்பில்லாத சங்கீதத்தை முன்னிறுத்தக் கூடியவர்.
உரிமைக்குரல்: புதிய இசை பரிமாண வளர்ச்சியில் இசை குறித்த விழிப்புணர்வும் தோன்றி விட்ட நிலையில் PMA-வின் அணுகுமுறையில் எந்த விதமான மாற்றங்கள் நிகழும்?
ஒந: (சிரித்து கொண்டே!) ரிஷிமூலத்தை ஆராய்கிறீர்கள். புதுவெள்ளம் நிச்சயம், தங்கு தடையின்றி பாயும். நிறைய Music Workshops, கல்லூரி மற்றும் பள்ளிகளில் - இசை விழிப்புணர்வு முகாம்கள் நடத்த விரும்புகிறோம். இளைஞர்களுக்கு - புதிய பாணி இசையைக் கற்றுக் கொடுப்பதோடு மட்டும் நின்று விடப்போவதில்லை. பழைய பாணி மட்டுமல்லாது, புதுவகை இசை பாணிகளை (Music Genre யை) அறிமுகம் செய்து, இசை விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறோம்.
      Studio Visit - Music Scan - Performance போன்றவைகள் PMA இசை வகுப்புகளின் முக்கியமான அம்சங்களாக இருக்கும் மேடை மேலாண்மை (Stage Management) யுக்திகளை அறிமுகப்படுத்தும், புது இசை வகுப்புகளை கூடிய விரைவில் அறிவிக்கவிருக்கிறோம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா