ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற லேலண்ட் P.F.தேர்தல் பல வகையில் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்தோட்டங்களை பிரதிபலிக்கிறது.
தொழிற்சங்கம்,
தொழிலாளர்கள் என்ற பார்வையோடு செயல்பட்ட சிஐடியு இயக்கத் தோழர்கள்
வி.பி.சிந்தன்,
டி.என்.நம்பிராஜன் ஆகியோர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தவர்கள்
லேலண்ட் தொழிலாளர்கள். உழைப்போர் உரிமைக்கழகம் சார்பில் போட்டியிட்டு வென்ற தோழர் S.உமாகாந்தன் மீதும் அதே நன்மதிப்பை வைத்துள்ளார்கள் என்பதை இந்த அறங்காவலர் தேர்வு
மீண்டும் நிரூபித்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக திருவாளர்கள் R.பாலசுப்ரமணியன், M.சக்திவேல்,
C.கணேசன், J.அல்லாபக்ஷ் ஆகியோர் ஒற்றுமையாகவும்
வர்க்க சிந்தனையோடும் பணியாற்றியது போல், புதிய அறங்காவலர்கள் T.S.அன்பழகன்,
J.அல்லாபக்ஷ், S.உமாகாந்தன், S.வேலுச்சாமி ஆகியோர் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு உழைப்போர் உரிமைக்குரல்
புதிய அறங்காவலர்களை மனமார வாழ்த்துகிறது!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா