Sunday, 27 April 2014

விழிப்புணர்வு

விழிப்புணர்வு...

தன.சம்பத்
255\J144

விடியலுக்குக் காத்திருந்த
செங்கதிரைக் கண்டதுமே
கமலமுகம் மலர்ந்ததுவே!
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
சூடமதன் பக்கத்தில்
சுடர்விடும் தீக்குச்சி
சுதந்திரமாய் நெருங்கியதும்
கணப்பொழுதில் கவருவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
நன்றிக்குச் சான்றான
வாலாட்டும் நாயினமும்
அயலாரைக் கண்டதுமே
புயலாகப் பாயுவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
மலரிடம் சேகரித்த
மதுவதனை அபகரிக்க
நெருங்கியதும் தேனீக்கள்
கொட்டிடவே துரத்துவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
வனத்தினிலே வாழ்கின்ற
அப்பாவி விலங்கினமும்
சிங்கமதைக் கண்டதுமே
தலைதெறிக்க ஓடுவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
பிரிவினை அரக்கனுக்கு
நாளெல்லாம் இரையாகும்
அப்பாவி மாந்தருக்கு
விடியலும் ஏன் வரவில்லை?
விழிப்புணர்வேன் பெறவில்லை?

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா