Saturday 28 June 2014

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி

அற்புதம் ஜேசுராஜ்
எவரெடி தொழிலகம்


இதயத்திற்கு வலிமை தரும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால், அது எப்பேர்ப்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.

தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும். டானிக்காக செயல்படும். தொற்று நோய்கள் ஏதும் தொற்றாது. இதயம், சிறுநீரகம் பலப்படும்.

நெல்லிச் சாறுடன் பாகற்காய் சாறை சேர்த்து சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.


அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதிலும் நெல்லிக் காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து, அதைத் தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாகக் கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி பளபளப்பாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.

நெல்லிக்காயின் சாறையும், தேனையும் சேர்த்து தினமும் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும், குடலுக்கும் பலம் கிடைக்கும். மேலும் மூளை, இதயம், கல்லீரம் ஆகிய உறுப்புகளும் பலப்படும். ஒரு ஸ்பூன் நெல்லிச் சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.

இவ்வாறான வழிகளில் நெல்லிக்கனியைச் சாப்பிட்டு வந்தால் மரணத்தைக் கூட தள்ளிப் போடலாம்.
என்ன நண்பர்களே... நெல்லிக்கனியை இன்றே சாப்பிட ஆரம்பிக்கலாமா...

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா