Friday, 20 June 2014

உடலின் இயக்கம்

P.சந்திரன்
256\L510

``மனித உடல் உணர்வுகளுக்கு சமமான எந்த ஒரு கருவியும் இதுவரை கிடையாது''
உடலின் வேதிமாற்றத்தை மட்டுமே அறியும் தன்மை படைத்தவை இன்றைய விஞ்ஞான மருத்துவக் கருவிகள்
மனித உடலின் அடிப்படை உணர்வு பசிதானே? இந்தப் பசியை கண்டுபிடிக்கும் கருவி உண்டா?
நோய்களின் வெளிப்பாடு வலிதானே? இந்த வலியை, அதன் அளவை, தன்மையை நிர்ணயிக்கும் கருவியை விஞ்ஞானம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
நாம் சிகிச்சை என்ற பெயரில் வகை வகையான துன்பங்களுக்கு உடலை உட்படுத்துகிறோம். அத்தனையும் தாங்குவது, சீர் செய்வது உயிர்! இந்த மருத்துவ விஞ்ஞானத்தால் உயிரை அறியவோ, விளங்கவோ முடியுமா? நோய்களைப் பற்றி நாம் முழுமையாக அறிவதே அதிலிருந்து விடுபட வழிவகுக்கும். அப்படி நாம் நோய்களை அறிய உங்கள் உடல் கூறுவதைக் கேளுங்கள்.
உடல் எந்நிலையிலும் தவறு செய்வதில்லை, கடமை தவறுவதில்லை.
எந்தத் தீங்கான பொருளையும் உடல் தனக்குள்ளே அனுமதிப்பதில்லை.
தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளவும், குணப்படுத்திக் கொள்ளவுமான கட்டமைப்பை உடல் பெற்றுள்ளது.
பசி - தாகம்  - உடலின் தேவைகள் : உணவும், நீரும் தேவைக்குத்தான் தர வேண்டும்.
தேவையில்லாமல் உடலிற்குள் தள்ளப்படும் எந்த ஒரு பொருளையும் உடல் கழிவாக மாற்றுகிறது.
கழிவுகள் வெளியேறும்போது ஏற்படும் தொந்தரவுகளை நாம் நோய் என்கிறோம்.
கழிவு வெளியேற்றத்தை மருந்துகள் மூலம் தடுப்பதால். கழிவுகள் தேக்கமுற்று நோய் வீரியம் பெறுகிறது.
தேக்கமடைந்த கழிவுகளின் பெருக்கமும், ரசாயன மருந்துகளின் தாக்கமும் உறுப்புகளைச் சேதப்படுத்துகின்றன.
எல்லா நோய்களுக்கும் காரணம் கழிவுகளின் தேக்கமும், இயற்கை விதிகளை மீறுவதுமே.
      இதிலுள்ள ஒவ்வொன்றையும் செயல்முறையில் சிந்திப்பீர்களானால் ஒவ்வொன்றிற்கும் தீர்வுகள் உங்களிடமே இருக்கின்றன.

      மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 3 வெள்ளைப் பொருட்கள் 1. பால், 2.சர்க்கரை 3. மைதா

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா