Saturday, 28 June 2014

பூவா? தலையா

உ.புஷ்பராஜ்
255\J158

இன்று வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்திலும் கூட குறிப்பாக நமது இந்திய தேசத்தில் திருமணமான பெண்கள் சந்திக்கும் சிக்கல்களுள் தலையாய சிக்கல் மருமகள் பெண் குழந்தையாக ஈன்றெடுக்கிறாளே என்று கணவர் வீட்டார் ஏசுவதும் உண்டு. மேலும், இவளுக்கு ``ஆண் குழந்தையே பிறக்காது, நம் வம்சம் தழைக்க ஓர் ஆண் வாரிசு வேண்டுமென்றால், நம் மகனுக்கு வேறு ஒரு பெண்ணைக் கட்டி வைக்க வேண்டியதுதான்'' என்று அக்கணவரின் பெற்றோரும், சுற்றமும் அப்பெண்ணை புறம்தள்ளி வைக்கிறார்கள்
.

படித்தவர்கள் நிறைந்த பட்டணத்தில்தான் இந்நிலையென்றால் கிராமங்களிலோ பெண் சிசுக் கொலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
நண்பர்களே! நமது குடும்பங்களிலோ அல்லது நமது சகோதரிகளுக்கோ இது போன்ற அவலங்கள் நிகழ்ந்தால் நம் மனம் எப்படி பதை பதைக்கிறது. இதற்கு அப்பெண் மட்டும்தான் காரணமா? நாம் சிந்திக்க வேண்டாமா? உண்மையில் மருத்துவ விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
மனித உடலை ஒரு கட்டடத்திற்கு ஒப்பிட்டால், சிற்றறை செல்களைச் செங்கற்கள் எனலாம். நம் ஒவ்வொருவர் உடலில் 6000 கோடி சிற்றறைகள் இருக்கின்றன. சிற்றறையின் நடுவில் அணுக்கரு உள்ளது. அணுக்கருவில் 23 ஜோடிகளாக 46 குரோமோசோம்கள் உள்ளன. 23வது ஜோடிக்கு பால் குரோமோசோம் என்று பெயர். இந்த பால் குரோமோசோம்தான் ஒவ்வொரு மனிதரின் பால் தன்மையை நிர்ணயிக்கின்றது.

பெண் இனத்தில் ஷ், ஷ் என இரண்டு குரோமோசோம்களும், ஆண் இனத்தில் ஒரு ஷ், ஒரு ஹ் என என இருவகை குரோமோசோம்கள் காணப்படுகின்றன. ஒரு கருமுட்டை ஒரு ஆணின் ஷ் குரோமோசோம் விந்துவால் கருத்தரிக்கப்பட்டால். அந்தக் கரு பெண்ணாக வளர்கிறது. அதாவது ஷ் + ஷ் = பெண்குழந்தை. மாறாக அக்கருமுட்டை ஹ் குரோமோசோம் விந்துவால் கருத்தரிக்கப்பட்டால் அக்கரு ஆணாக வளர்கிறது. அதாவது ஷ் + ஹ் = ஆண்குழந்தை

பூவா தலையா? என போட்டுப் பார்த்தது அந்தக் காலம். எக்ஸா, ஒய்யா? எனக் கேட்டுப் பார்ப்பது இந்தக் காலம். ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள கரு ஆணாகவோ, பெண்ணாகவோ உருவாவதற்குக் காரணம் ஆண்தான். பெண்ணல்ல என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு, இந்தச் சமுதாயத்தில் நிலவி வரும் தவறான கருத்தை, பெண்ணின் மீது சுமத்தப்படும் வீண் பழியைப் போக்குவோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா