Wednesday 20 August 2014

விஞ்ஞானிகளின் விஞ்ஞானி மைக்கேல் பாரடே!

B.சதீஷ்குமார்
240\36927

சர் ஐசக் நியூட்டனின் குழப்பத்தை, மர்மத்தைக் கட்டவிழ்த்து தெளிவாக்கியவர் மைக்கேல் பாரடே. புவி ஈர்ப்பு விசையால் சூரியன் மற்ற கிரகத்தைத் தொடாமல் சுற்றி வருவது எப்படி? என்ற கேள்விக்கு புவி ஈர்ப்பு விசையால் சூரியன் ஒன்றோடொன்று தொடுவது மட்டுமல்ல, சரியான தனது சுற்றுப் பயணத்தில் சுற்றுகிறது என்பதை பாரடே விளக்கினார். அதே போல பழம் மரத்தில் இருந்து எப்படி கீழே விழ வேண்டும் என்பதை மைக்கேல் பாரடே தனது எலக்டிரிக் மேக்னடிக் ஃபோர்ஸ் மூலம் விளக்குகிறார். எலக்ட்ரிகல் கரண்டை மெக்கானிகல் மோஷனாக மாற்றியவர் பாரடே. இன்று உலகம் இவ்வளவு பெரிய வளர்ச்சியை  அடைந்ததற்கு காரணமே பாரடேவின் சுழற்சி கண்டு பிடிப்பே! முதல் தொடர் ஓட்ட மின் மோட்டாரை நமக்களித்தவர் பாரடே. அணுவில் நேர் மின்னோட்டம், எதிர் மின்னோட்டம் அறிந்து, டைனமோவைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் பாரடே. ஜெனரேட்டர். காலிங் பெல் மின்காந்த வேதியியல் என பற்பல கண்டுபிடிப்புகள் பாரடே உடையவையே! அதனால்தான் மைக்கேல் பாரடேவை விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று வரலாறு அழைக்கிறது.


இவ்வளவு கண்டுபிடிப்புகள் இவரது சாதனையாக இருந்தாலும், அவரது வாழ்க்கை வலி மிகுந்த போராட்டங்களைக் கொண்டது. 1791ல் குதிரைக்கு லாடம் அடிக்கும் ஜேம்ஸ் பாரடேவின் மகனாக ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, துயர வாழ்வை அனுபவித்து புத்தக பைண்டிங் கடையில் வேலை பார்த்தும் கூட விஞ்ஞான ஆய்வுகளைத் தொடர்ந்தவர் பாரடே. மின் ஏற்புத் திறன் என்பதை அவர் நினைவாக பாரட் என்னும் அலகால் அளக்கிறோம். பாரடேவின் மின் காந்தத் தூண்டல் குறித்த விதி இல்லையெனில் இன்று எந்த மின் சாதனமும் இல்லை. மைக்கேல் பாரடே காந்தப் புலனும், மின்சாரமும் எத்தகைய தொடர்புடையவை என நிரூபித்திருக்கா விட்டால் பீல்டு தியரி என்றழைக்கப்படும் மின்கலக் கோட்பாடு இல்லை. ஆனோடு <அய்ர்க்ங்>, கேத்தோடு <இஹற்ட்ர்க்ங்> எல்லாம் பாரடே அளித்த பெயர். பென்சீன் எனும் வேதிப் பொருளைக் கண்டுபிடித்தவர் பாரடே.

காந்தத்தையும், மின்சாரத்தையும், ஒளியையும் ஒன்று சேர்த்துப் பார்த்தார் பாரடே. காற்று வழியாக காந்தம் பரவாது என்பதை பாரடே ஏற்றுக் கொண்டார். கண்ணாடித் துண்டு வழியே காந்த விசையை ஒளியினால் டுவிஸ்ட் செய்தார். ஒளிக் கற்றையை தனியாகப் பிரிக்க முடியும் என்ற பாரடேவின் கண்டுபிடிப்பு பேரறிஞர் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புக்குப் பேருதவியாக இருந்தது.

கடைசிவரை எந்தப் பலனும் எதிர்பார்க்காமல், ராயல் கல்வியகத்தில் தலைமை பொறுப்பாளராக இருப்பினும், சாதாரணமாக வாழ்ந்து 1867ல் தனது ஆய்வகத்திலேயே இறந்து தியாகியானவர் பாரடே. தனது கண்டுபிடிப்புகளுக்கு ராயல்டியே வாங்காமல் தியாக வாழ்வு வாழ்ந்தவர். சாதி, மதம், மேல்குடி, கீழ்குடி என்பதெல்லாம் அறிவியலுக்குக் கிடையாது. அறிவு எல்லையற்றது. அறிவியலோ கண்ணிற்கு எட்டிய தூரத்தையும் தாண்டிய பெரிய வானத்தின் முதல் அடியையே இப்போது தான் எடுத்து வைத்திருக்கிறது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் போதும்; எல்லோரும் விஞ்ஞானி ஆக முடியும்!  அதற்கு மைக்கேல் பாரடே சாட்சி!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா