Wednesday 20 August 2014

கல்லீரல்

Healer P.சந்திரன் D.Acu.
256/L510

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் அனைத்தும் நல்லவிதமாக ஜீரணிக்கப்பட்டு, அதிலுள்ள நச்சுப் பொருட்கள் நீக்கப்பட்டு, கொழுப்பு இரத்தக்குழாயில் தங்காமல், உடலெங்கும் நல்ல இரத்தத்தைச் செலுத்தும் பணி கல்லீரலைச் சார்ந்ததாகும். இது ஒழுங்காக இயங்கும் வரை ``கொலஸ்ட்ரால்'' என்ற பேச்சுக்கே இடமில்லை. உடம்பினுள் தசை நார்களையும், இரத்தக் குழாயிலுள்ள தசை நார்களையும் தேவைக்கேற்ப சுருங்கி விரிவடையச் செய்யும் திறன் கொண்டது கல்லீரலாகும்.

கல்லீரல் பாதிப்புக்குள்ளாகும்போது இரத்தக் குழாய்கள் தேவைக் கேற்ப சுருங்கி விரியாததால் இரத்த அழுத்தம் <ஆட> எனும் நோய் உண்டாகிறது. கண்களில் ஏற்பட்டால் எப்ஹன்ஸ்ரீர்ம்ஹ என்னும் நோய் கண்களைத் தாக்குகிறது. மூளையில் உள்ள இரத்தக்குழாய் பாதிக்கப்படும் போது பக்கவாத நோய் உண்டாகிறது. மூளையினுள் அய்ங்ன்ழ்ண்ள்ம் எனும் இரத்தக் குழாய் வெடித்துப் போகும் அளவுக்குப் பெருத்து வீங்கும் நோய் ஏற்படுகிறது. இதுவே நாளடைவில் தோல் சம்பந்தப்பட்ட நோய்களாகவும் உருவெடுக்கிறது.


ஐம்புலன்களில் ஒரு முக்கிய உறுப்பாகிய கண்; இதற்கு சக்தியூட்டும் உறுப்பு கல்லீரல். இதை நன்றாகப் பேணிக் காக்காவிடில் கண்களில் தோன்றும் நோய்களான கிட்டப் பார்வை, தூரப் பார்வை, கண்களில் நீர் வடிதல், கண் கூசுதல், கண் அரிப்பு, சிவந்து போதல் போன்ற நோய்கள் தோன்றும். மற்றும் நகச்சுத்தி, நகம் ஒடிந்து போவது, பட்டுப் போவது, தோலில் புண்கள் ஏற்படுவது, நகம் கறுத்துப் போவது ஆகியவை கல்லீரலின் பலவீனத்தை உணர்த்துகின்றன. கல்லீரலைப் பலப்படுத்துவதன் மூலம் கண்களில் தோன்றும் 75% நோயைக் குணப்படுத்தலாம். கண்களுக்கு வேண்டிய சக்தியைக் கொடுத்து, கண் நோய்களிலிருந்து பாதுகாப்பது கல்லீரல்தான்.

கல்லீரல் தன்னைத்தானே புதுப்பித்து, புத்துயிர் பெறும் நேரம் இரவு 1 முதல் 3 மணி வரை. இந்நேரத்தில் உறக்கம் அவசியம். மேலும் இந்நோய்களில் இருந்து நிவர்த்தி செய்ய கால் பெருவில் நகத்தின் அடுத்த இடத்தில் ஆரம்பிக்கும் அக்குபங்சர் புள்ளி இது. கல்லீரலின் ஆரம்ப சக்தியூட்டும் புள்ளியான இந்தப் பகுதியை கைவிரல்களால் வாரத்திற்கு ஒரு முறை 3 நிமிடம் அழுத்தி, அழுத்தி விடவும். கல்லீரலுக்கு சக்தி கிடைக்கும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா