Thursday 22 January 2015

அசோக் லேலண்ட் தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கத்திற்கு உஉக-வின் கோரிக்கைகள்

அசோக் லேலண்ட் தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கத்தின் பொதுப்பேரவை 26.9.14 அன்று நடைபெற்றது. அப்பேரவையில், உழைப்போர் உரிமைக்கழகம் எழுப்பிய கோரிக்கைகளை உங்கள் முன் வைக்கிறோம்.

1. அசோக் லேலண்ட் தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கத்தின் பொதுப்பேரவை கூட்டத்தை வேலை நாளில் வைத்து, அனைத்து உறுப்பினர்களும் பங்குபெற முடியாத நிலையை, இனி வருங்காலங்களில் களைய வேண்டும்.

2. இனிப்புகள் வழங்குவதற்கு, ஓசூரில் வழங்குவதுபோல் கம்பெனியிலேயே வழங்க வாய்ப்பு இருந்தும் மறுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கம்பெனிக்குள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. புதிய வெல்ஃபேர் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

4. மல்டி ஸ்டேட் சொசைட்டி (ஙன்ப்ற்ண் நற்ஹற்ங் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்) அந்தஸ்தைப் பெற முயற்சி எடுக்க வேண்டும்.

5. அடமானக் கடன் மற்றும் வீட்டுக் கடன் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.

6. நகைக்கடன் ரூ.8,00,000\-லிருந்து ரூ.10,00,000\-மாக மாற்ற வேண்டும்.

7. நமது கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தக் கட்டிடம் வாங்க வேண்டும். இதனால் வாடகை மிச்சமாகும்.

8. சொசைட்டியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2003க்குப் பிறகு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

9. சொசைட்டி பணியாளர்கள் நியமனத்தில் அவுட்சோர்ஸ் தவிர்த்து நிரந்தரப் பணியாளர்கள் புதிதாக நியமிக்க வேண்டும்.

10. ஓசூரில், ஓசூர் - 1ல் இருந்து ஓசூர் - 2க்கு மாற்றப்பட்ட இயக்குனருக்கு தற்போது நடைபெறவுள்ள கூட்டுறவு இடைத்தேர்தலில், தேர்தல் நடைபெறுமா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

11. ஒரு உறுப்பினர் இறக்கும் தருவாயில் அவருடைய ஜாமீன்தாரர்களுக்கு  நிர்வாக ரீதியாக ஏற்படும் சிக்கல்களை நீக்க வேண்டும்.

12. சங்கத்தின் திருத்தப்பட்ட பைலாவை (ஆஹ் கஹஜ்) அனைவருக்கும் வழங்க வேண்டும்.

13. வரவு-செலவுகளின் ஐயங்களை போக்க, வரவு-செலவுக்கான வெள்ளை அறிக்கையை உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கூட்டப்பேரவையின் இறுதியில் சங்கத்தின் பைலா இரண்டு மாதங்களுக்குள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்படும் என நிர்வாக இயக்குனர் பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா