Thursday 22 January 2015

மரண வாக்குமூலம்

பிரேம் N.பிரேமராசன் B.Sc.,B.L.

Mobile: 97104 76927



``சாட்சிய சட்டம்'' பகுதியில் (பட்ங் உஸ்ண்க்ங்ய்ஸ்ரீங் அஸ்ரீற் 1872) மரண வாக்குமூலம் குறித்துச் சொல்லப்படுகிறது. உதாரணமாக `அ'வை `ஆ' அடிக்கிறார், தாக்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அ மரணம் அடைவதற்கு முன் என்னுடைய இந்த மரணத்திற்கு ஆ தான் பொறுப்பு என்கிறார். இந்த வாக்குமூலம் எழுத்து வடிவமாகவும் தொகுக்கப்படலாம். பிறகு அ மரணமடைகிறார். இது மரண வாக்குமூலம்!

சரி, இது பற்றி சட்டம் என்ன சொல்கிறது? மரண வாக்குமூலம் ஏற்புடையதா? இதை ஆராய்ந்து பார்த்தால், மரண வாக்குமூலம் ஏற்புடையது என்று சட்டம் சொல்கிறது. ஏன் ஏற்புடையது என்றால் இதில் மரணமடைபவரே முழு சாட்சியாக உள்ளார். மரணப் பிடியின் வாசலில் இருப்பவர் சொல்லும் வாக்குமூலம் உண்மையாக இருக்கும் என்று அனுமானம் கொள்ளலாம் என சட்டம் சொல்கிறது. இதை லத்தீன் மொழி ஙஹஷ்ண்ம் எனச் சொல்கிறது. அதாவது மரணம் அடையப்போகிறவர் பொய் சொல்ல மாட்டார் என்கிறது. மரணம் அடையப்போகிறவர் உதட்டில் உண்மை அமர்ந்திருக்கிறது என்கிறது.

அடுத்தது, மரண வாக்குமூலம் ஏற்புடையதற்கு காரணம் கட்டாயத் தேவை (சங்ஸ்ரீங்ள்ள்ண்ற்ஹ்). மரணவாக்குமூலம் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து வடிவமாகவோ இருக்கலாம். இந்த மரண வாக்குமூலம் ஒன்றே சூழ்நிலை சாட்சி. இதை ஏற்க மறுத்தால் அது நீதிக்கு பதில் அநீதி ஆகிவிடும் என்று சட்டம் சொல்கிறது.

மரணம் அடைந்தவரை கோர்ட்டுக்கு அழைக்க முடியாது. சாட்சி சொன்னவர் மரணம் அடைந்து இருக்க வேண்டும். முழுமையான அறிக்கை கொடுக்கக்கூடிய நிலையில் இருக்க வேண்டும். மரண வாக்குமூலம் சிவில் மற்றும் கிரிமினல் இரண்டுக்கும் பொருந்தும். மரண வாக்கு மூலம் சாட்சிய சட்டம் பிரிவு 32(1)-ல் வருகிறது.

மரண வாக்குமூலம் - ஏற்றுக் கொள்ள முடியாதவை!

மரண வாக்குமூலம் அளித்தவர் இறக்கவில்லையென்றால் அந்த வாக்குமூலம் ஏற்றுக் கொள்ள முடியாதது. கற்பழிப்பு ஏற்பட்டு பிறகு அந்தப் பெண் அறிக்கை கொடுத்த பிறகு தற்கொலை செய்து கொண்டால் அது ஏற்க இயலாதது. காரணம் அறிக்கை கற்பழிப்பு பற்றியது. இறப்பு பற்றியதல்ல.

மரணவாக்குமூலம் மாஜிஸ்டிரேட் முன் பதிவு செய்வது பலமானது.

(தொடர்ந்து அறிந்து கொள்வோம்)

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா