பிரேம் N.பிரேமராசன் B.Sc.,
B.L.
450/F159, QC Lab
450/F159, QC Lab
தொழிலாளிகளான நமக்கு நல்ல சம்பளம் (Decent Pay), நல்ல ஓய்வூதியம் (Decent Pension), நல்ல மருத்துவம் (Decent Medicare) ஆகிய மூன்றும் மிக முக்கியமானது. ஆனால் இந்த மூன்றிலும்
நாம் நமது அதிகாரிகளை ஒப்பிடும்போது படுபாதாளத்தில் இருக்கிறோம்.
சம்பளம்
(டஹஹ்): சம்பளத்தை எடுத்துக் கொண்டால்
2000_ம் ஆண்டு நமது சம்பளத்தைப் போல் இரண்டு மடங்காக இருந்த அதிகாரியின் சம்பளம்
இன்று நமது சம்பளத்தைப் போல் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. 34 வருடங்கள்
பணியாற்றிய தொழிலாளியின் நிலை இது. ஆனால் 10 ஆண்டுகள் பணி பூர்த்தி செய்திருக்கும்
அதிகாரி தொழிலாளியைக் காட்டிலும் மூன்று மடங்கு சம்பளம் வாங்குகிறார்.
ஓய்வூதியம்
(டங்ய்ள்ண்ர்ய்): அடுத்து பென்சன்.
இதிலும் நமக்கு பின்னடைவுதான். இன்று ஓய்வுபெறும் தொழிலாளி மாதம் ரூ.4000\_
பென்சன் வாங்க இயலவில்லை. இப்போது உள்ள விலைவாசியில் ஓய்வு காலத்தில் மகனை
எதிர்பார்க்காமல் சொந்த வீடும் இல்லாத தொழிலாளி தம் துணைவியாருடன் எப்படி வாழ
முடியும்? ஆனால் அதிகாரிகளுக்கு சூப்பர் ஆன்யுவேஷன் (நன்ல்ங்ழ் அய்ய்ன்ஹற்ண்ர்ய்)
என்று தேவையான பணம் ஓய்வுக்குப் பிறகு கொடுக்கப்படுகிறது. அரசாங்கத்தில் வேலை
செய்பவர்களுக்கு ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தில் பாதி சம்பளம் (ஏஹப்ச் டஹஹ்
டங்ய்ள்ண்ர்ய்) பென்சனாக கொடுக்கப்படுகிறது. (2004க்குப் பிறகு அரசுத் துறையில்
நிரந்தரமானவர்களுக்கு இது பொருந்தாது.)
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா