Wednesday, 1 August 2012

உடல் உறுப்பு தானம் செய்வோம்! உடல் தானம் செய்வோம்!!



M.ஆதிகேசவன்
264\K066

      உடல் உறுப்பு தானம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

முதல் வகை தானம்: ஒருவர் உயிருடன் இருக்கும்போது செய்யக்கூடிய தானம். ரத்த தானம், சிறுநீரகம், தோல் எலும்பு, எலும்பில் இருந்து எடுக்கப்படும் இரத்தம் (நற்ங்ம் இங்ப்ப்), ஆண் விந்து, பெண் கரு முட்டை இவைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வேறு ஒருவருக்குப் பொருத்தப்படுகிறது.

இரண்டாம் வகை தானம்: மூளைச்சாவு (ஆழ்ஹண்ய் ஈங்ஹற்ட்), சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலையில் உள்ள ஒருவர், செய்யக்கூடிய தானம் இரண்டாம் வகை தானம். கண் கருவிழி, ஈரல், இதயம், தோல் தசைநார், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் எடுக்கப்பட்டு தேவைப்படுபவர்களுக்குப் பொருத்தப்படுகிறது.

உடல் உறுப்பு தானம்: மருத்துவர் அசோகன் _ புஷ்பாஞ்சலி தம்பதியரின் மகன் ஹிதேந்திரன் (ஆழ்ஹண்ய் ஈங்ஹற்ட்) உடல் உறுப்பு தானத்திற்குப் பிறகு நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டு பல ஆயிரம் பேர் பலனடைந்து வருவதாக உடல் உறுப்புகளைப் பெறும் திட்டத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அமலோற்பவ நாதன் தெரிவித்துள்ளார். தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அரசு மருத்துவமனைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது?

உடல் தானம்: சுதந்திரப் போராட்ட வீரரும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்குவங்க முதல்வராக இருந்தவருமான தோழர் ஜோதிபாசு, தனது இறப்புக்கு முன்பே உடல் தானம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பதிவு செய்து, இறப்புக்குப் பின்பு உடலையும் தானம் செய்து வழிகாட்டியாய்த் திகழ்கிறார். சமீபத்தில் மறைந்த விடுதலைப் போராட்ட வீராங்கனை கேப்டன் லட்சுமி அவர்களும் உடல் தானம் செய்துள்ளார்.

      மனித நேயத்தின் உயர்ந்த வடிவமே உடல்தானம், உடல் உறுப்புகள் தானம். சாதி, மதம், இனம், மொழி, தேசம் கடந்தது. எந்த ஒரு நபராலும் எல்லாவற்றையும் செய்து விட முடியாது. ஆனால் ஒவ்வொருவராலும் ஏதோ ஒன்றை செய்ய முடியும். ஏன் நாமும் அதில் ஒருவராக இருக்கக் கூடாது? உடல் தானம், உடல் உறுப்பு தானம் செய்வோம்! உயிர்களைக் காப்போம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா