Wednesday, 1 August 2012

தெருக்கூத்து | கவிதை



அ.பன்னீர்செல்வம்
261/36354

கோவில் திருவிழாவின் அம்சமென
தெருவீதியில் உருவாகி
ஊர்க்கூடி பார்த்திருக்க....

காலத்தில் அழியாத
இதிகாச காவியங்கள்
நல்ல கருத்துடனே படைக்க....

கால் சலங்கையின் ஜதி ஓசையோடு
இட்டுக்கட்டும் மெட்டு பாட்டிலே சுதி ஏற
இசையோடு ராகங்கள் சதிராட....

உயிர்க்கொண்ட ஓவியமாய்
திருக்கோவில் தெய்வங்கள்
கண்ணுக்குள் நடனமிட....

கற்பனை வளம் கொண்டு
கதையோடு வசனங்கள் மின்னலிட....

சபை நாடக அரங்கேறி
மக்கள் மனங்களின் ரசனையிலே
தலவிருட்சமென குடிகொண்டு

தமிழ் மண்ணோடும் மனத்தோடும்
இரண்டறக் கலந்திட்ட
பழம்பெருமைகள் மறையாத

தென்னாட்டு கிராமியக் கலையே!
தெருக்கூத்தே உமைப் போற்றுவோம்!

(சிறிது சிறிதாக மறைந்து வரும் தெருக்கூத்து கிராமியக் கலையை உயர்த்திப் பிடிக்கும் ஒரு கவிஞனின் குரல்)

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா