A.K.பத்மநாபன்
அகில இந்தியத் தலைவர், சி.ஐ.டி.யு.
துணைத்தலைவர் _ உலகத் தொழிற்சங்க சம்மேளனம்
அகில இந்தியத் தலைவர், சி.ஐ.டி.யு.
துணைத்தலைவர் _ உலகத் தொழிற்சங்க சம்மேளனம்
அன்புள்ள
தோழர்களே, வணக்கம்.
உழைப்போர் உரிமைக்குரல் 8 ஆண்டுகள் பூர்த்தி
செய்து 9வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு தொழிற்சங்க இதழை நடத்துவதில் உள்ள
சிரமங்களை நான் நன்கறிவேன். அதிலும் குறிப்பாக ஒரு தொழிற்சாலையை மையப்படுத்தி ஒரு
இரு மாத இதழைத் தொடர்ந்து வெளிக் கொணர்வது சிரமமான காரியம்.
இந்நிலையில், அசோக் லேலண்ட் தோழர்கள்
பன்முகத் தன்மையோடு இந்த இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருவது
பாராட்டுக்குரியதாகும். சொந்த தொழிற்சாலைக்கும் அப்பால் இதர நடப்புகள் குறித்தும்,
இலக்கிய விஷயங்கள் குறித்தும் நல்ல முறையிலான படைப்புகள் வெளி வருகின்றன.
பாராட்டுக்குரிய இந்தப் பணியை மேலும்
சிறப்பாகத் தொடர்ந்து செய்ய வேண்டுமென பொறுப்பாளர்கள் அனைவரையும் கேட்டுக்
கொள்கிறேன்.
வரவிருக்கும் நாட்கள் மிகக் கடுமையான
தாக்குதல்களை சந்திக்க வேண்டிய நாட்களாக உள்ளன. தொழிலாளி வர்க்க ஒற்றுமையையும்
வலியுறுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கு உரிமைக்குரல் துணை நிற்க வேண்டும். அதை
நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்.
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
(ஏ.கே.பத்மநாபன்)
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா