Saturday 13 October 2012

சொசைட்டி செய்திகள்



      அசோக் லேலண்ட் தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கத்தின் பொதுப்பேரவை 17.9.12 அன்று அ.ச.ராமசாமி திருமண மண்டபம், தண்டையார்ப்பேட்டையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தனி அலுவலர் திரு.ஜெகன்சிங்ராஜன் பங்கேற்றார். அக்கூட்டத்தில் உழைப்போர் உரிமைக் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:


நமது சொசைட்டி அலுவலகம் தற்போது செயல்படும் இடத்திற்கு வாடகை தர வேண்டியுள்ளதால், நாமே அதை வாங்கி சொந்தமாக்கிக் கொள்வதன் மூலம் வாடகையை மிச்சப்படுத்தலாம். சொசைட்டிக்கு நிரந்தர இடமும் சொந்தமாகும். நமது சொசைட்டி துவங்கி 50 ஆண்டு பொன்விழாவை 2013-ம் ஆண்டு மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். பொன்விழா நினைவாக உறுப்பினர்களுக்கு 4 கிராம் தங்கம் வழங்க வேண்டும். பட்ழ்ண்ச்ற் ஐய்ற்ங்ழ்ங்ள்ற் 9.5%ல் இருந்து 10% ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கல்விக்கடன் குறைந்த வட்டியில் வழங்கப்பட வேண்டும். நகைக்கடன் 5 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக உயர்த்த வேண்டும். பண்டிகை கால கடன் வழங்க வேண்டும். துணை விதிப்படி வீட்டுவசதிக்கடன், வீடு அடமானக் கடன் வழங்க வேண்டும். சொசைட்டி பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால் அதற்கேற்ப இயக்குனர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். துணைவிதி 19-ன் கீழ் தேர்தல் சம்பந்தமான சிறப்பு பேரவைக் கூட்ட வேண்டும். வேட்பு மனு வழங்குதல், திரும்பப் பெறுதல், தேர்தல் நாள் தனித்தனி நாட்களில் நடத்த வேண்டும். நடப்பு ஆண்டில் இயக்குனர் தேர்தலில் சமூக நீதியை நிலை நிறுத்த இட ஒதுக்கீடு கறாராக அமுல்படுத்த வேண்டும். சொசைட்டிக்கென ரங்க்ஷள்ண்ற்ங் உருவாக்கி ஆன்லைனில் நம் கணக்கு விபரங்களை தெரிந்து கொள்ள வசதி செய்து தரப்பட வேண்டும்.

ஆதனூர்... வீடு கட்டுமான கூட்டுறவு சங்க செய்திகள்

      கடந்த 20-9-12 அன்று நடைபெற்ற அசோக் லேலண்ட் பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டுமான சங்க பொதுப் பேரவையில், உழைப்போர் உரிமைக் கழகம் சார்பில் தோழர் ந.சுகுமார் கொண்டு வந்த தீர்மானங்களை சங்கத்தின் தனி அதிகாரி திரு.சோமசுந்தரம் அவர்கள் ஏற்றுக் கொண்டதை உரிமைக்குரல் வரவேற்கிறது. தீர்மானத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

தீர்மானங்கள்

1.     அசோக் லேலண்ட் பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டுமான சங்க இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவோ அல்லது தகுந்த மாற்று இடமோ தர நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது.

2.     தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன், சிறப்புப் பேரவையைக் கூட்டி விவாதித்து முடிவுகளை மேற்கொள்வது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா