அ.அப்துல்
வாஹித்
752\36991
சென்னை
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் டீலக்ஸ் பஸ்கள்அடிக்கும் கட்டணக் கொள்ளை சொல்லி மாளாது.
உதாரணத்திற்கு சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து மெரினா கடற்கரை செல்வதற்கு
6டி என்ற சொகுசு மற்றும் விரைவுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சாதாரண பேருந்துகள்
இயக்கப்படுவதில்லை. இதற்குக் கட்டணம் ரூ.13\-, ரூ.9\- இடைப்பட்ட தூரம் 3 அல்லது 4 கி.மீ.
மட்டுமே.
சொகுசுப் பேருந்துகளின் நிலையைப் பார்த்தால்
உடைந்த இருக்கைகள், தட்டினால் தூசி பறக்கும் இயங்காத தானியங்கிக் கதவுகள். சரிவர இயங்காத
மின்னணு வழித்தட பலகைகள். இதுதான் சொகுசுப் பேருந்துகள். எல்லா வழித்தடங்களிலும் சொகுசுப்
பேருந்துகளின் நிலை இதுதான்.
கட்டண உயர்வுக்கு நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாளர்களும்,
கொள்ளையே கொள்கையாகக் கொண்ட அதிகாரிகளுமே பொறுப்பு. ஆனால் இவர்கள் கூறும் காரணம் நிர்வாகச்
செலவுகள் என்பதே. நிர்வாகத் திறமையற்றவர்கள் எங்கு இருந்தாலும் செலவுகள் கூடத்தான்
செய்யும். அடுத்த காரணம் பக்கத்து மாநிலத்தை உதாரணமாகக் காட்டுவது. அந்த மாநிலத்தைவிட
கட்டணம் குறைவு என்பது. அதுவம் தவறு.
உதாரணத்திற்கு நமது பக்கத்து மாநிலமான ஆந்திர
மாநிலத்தில் இயக்கப்படும் பேருந்துகள் ஊத்துக்கோட்டையிலிருந்து சத்தியவேடு செல்ல வசூலிக்கும்
கட்டணம் ரூ.7\- மட்டுமே. இதன் இடைப்பட்ட தூரம் 15 கி.மீ. ஆந்திர மாநிலத்தில் கட்டணம்
குறைவாக வசூலிக்கும் போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு மட்டும் நஷ்டம்
எப்படி வரும்?
மற்றபடி புறநகர் பகுதிகளில் சில வழித்தடங்களில்
சாதாரணப் பேருந்துகள் இயக்குவதே கிடையாது. அல்லது ஒன்று, இரண்டு பேருந்துகள் இயக்குவார்கள்.
ஆனால் சில வழித்தடங்களில் சாதாரணப் பேருந்து அறவே கிடையாது. சுங்கச்சாவடி - பட்டினப்பாக்கம்
இடையில் 32ஏ வழித்தடத்தில் சாதாரணப் பேருந்து என்பதே கிடையாது. சுங்கச்சாவடி - திருவான்மியூர்
6டி வழித்தடத்தில் அறவே கிடையாது.
எனவே, மக்கள் தமிழக அரசிடம் எதிர்பார்ப்பது சாதாரணப்
பேருந்துகளை எல்லா வழித்தடங்களிலும் அதிகம் இய்ய வேண்டும் என்பதே! மேலும் மேலும் டாஸ்மாக்
கடைகளைத் திறக்க வேண்டும் என்பது அல்ல!
தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா