- ஆர் பத்மநாபன் 261/L054 தலைவர், உழைப்போர் உரிமைக்கழகம்
பகத்சிங்... இளைஞர்களை ஈர்க்கும்
ஒரு மந்திரச் சொல்!
1918ல் ஜாலியன் வாலாபாக் பயங்கரத்தைக் கண்ட ஒரு 11 வயது இளைஞனாக ஆங்கில அரசை
எதிர்க்க உறுதி பூண்டார். சோசலிசமே மக்களை நிரந்தரமாக விடுவிக்கும் என சோசலிசத்திற்கு
ஆதரவான அனைத்து இளைஞர்களைத் திரட்டி. மாபெரும் மக்கள் தலைவன் ஆனான். 1931, மார்ச் 23ல் ஆங்கில ஏகாதிபத்திய அரசு தேசத்துரோகக் குற்றம் சாட்டி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்
ஆகிய மூவரையும் தூக்கிலிட்டது.
நமது நாட்டு இயற்கை வளங்களைக்
கொள்ளையடிக்க வந்த ஏகாதிபத்திய ஆங்கில அரசை விரட்டியடிக்கவும், இந்திய
மக்கள் அனைவரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் தன் உயிரை ஈந்த போராளி மாவீரன் பகத்சிங்
நினைவைப் போற்றுவோம்.
இன்று நாட்டின் இறையாண்மையும், சுதந்திரமும், மக்களின்
ஜனநாயக உரிமைகளும் பறிபோகும் நிலைமையை எதிர்த்துப் போராட இளைஞர் பட்டாளம் முன்வர வேண்டும்.
நாட்டைக் காக்க அன்று இருந்த இளைஞர் பட்டாளம் வீறுகொண்டு எழுந்த வரலாறு அறிய வேண்டியது
அவசியம்.
மாவீரன் பகத்சிங்கை அறியாத
இந்திய மக்களே இருக்க முடியாது. மாவீரன் பகத்சிங்கின் இந்திய மக்களைப் பற்றிய கனவும், ஏகாதிபத்திய
எதிர்ப்புணர்வும் நம் மனதில் எழ வேண்டும். இன்றைய அந்நிய ஏகபோக முதலாளிகளும் அவர்களுக்கு
ஆதரவாக செயல்படும் ஏகாதிபத்திய அரசுகளும் உலக உழைக்கும் மக்களைச் சுரண்டியும், நாட்டின்
வளங்களைக் கபளீகரம் செய்யும் செயலுக்கு துணை போகும் இந்தியப் பெரு முதலாளித்துவ அரசை
அப்புறப்படுத்தி, இந்திய மக்களையும், இந்திய நாட்டின் செல்வங்களையும்
பாதுகாக்க இளைஞர் பட்டாளம் முன்வர வேண்டும். மார்ச் 23.. பகத்சிங் நினைவாக இளைஞர்களே.... வீறு கொண்டு எழுந்து நாட்டையும், நாட்டு
மக்களையும் காக்க உறுதியேற்போம்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா