Friday, 14 June 2013

நமது குரல்



சேசிஸ் பகுதியில் புது கன்வேயர் செட்டில்மென்ட் பிரச்சனையில் அப்பகுதி தொழிலாளர்களின் கருத்தறிந்து செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் நன்கு விவாதித்து தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைக்க சங்கம் முன் வர வேண்டும்.
பேசி முடிக்கப்பட்ட 300 தொழிலாளர்களில், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட 50 தொழிலாளர்களின் வாரிசுகளை உடனடியாக வேலைக்கு வைக்க சங்கம் நிர்வாகத்தை நிர்பந்திக்க வேண்டும். இறந்தோர் வாரிசை உடனே வேலைக்கு எடுக்க வேண்டும்.

சங்கத் தலைவர் குசேலர் தேர்தல் நேரத்தில் அறிவித்த 50 பைசா, பிரச்சனையையும் இந்த ஆண்டு  BE. முடித்த வாரிகளுக்கு வேலை குறித்தும் உடனடியாக நிர்வாகத்திடம் பேசி முடிக்க வேண்டும்.
20% உச்சவரம்பற்ற போனஸ் + இலாபத்தில் 10% பங்கு என்ற கோரிக்கை வைத்துள்ள சங்கம், உடனடியாக அக்கோரிக்கை நிறைவேற முனைப்புடன் செயல்பட வேண்டும்.
ஒப்பந்த முறிவு அளித்து சங்கம் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையைத் துவக்கவுள்ளது. கடுமையான விலைவாசி உயர்வால் தொழிலாளர்கள் அல்லல்படும் நேரம் இது. ஆகவே, உடனடியாக ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட வேண்டும் என்பது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா