B.டில்லி 264/L602 சித்த வைத்தியர் - 8122309822
செம்பருத்திப் பூவின் வேறு
பெயர்கள் சப்பாத்து, சம்பரத்தை
ஆகும். இலை, பூ,
வேர் ஆகிய உறுப்புகள் பயன்படும். வெள்ளைப்படுதல்,
குருதி வெள்ளை, இருதய சம்பந்தமான நோய்கள், ஆண்மை
குறைவு இவைகள் நீங்கும்.
மருந்து செய்முறை: வேலூர்
சித்த மருத்துவர் கண்ணப்பர் கூறிய அனுபவ முறைகள். ஐந்து இதழ்கள் உள்ள ஒற்றை அடுக்கு
செம்பருத்திப் பூக்களை எடுத்து அதில் உள்ள மகரந்தத்தை எடுத்துவிட்டு,
பூக்களை மட்டும் 200 மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, இரண்டு ஸ்பூன் தேன் கலந்து 50 மில்லியாக
சுண்ட வைத்து தினமும் காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது
போல் 3 மாதங்கள் சாப்பிட்டால் இதயத்தில்
உள்ள ஓட்டை சரியாகிவிடும். இதய ஓட்டையால் வரும் பிரச்சனைகளும் சரியாகிவிடும். இம்முறையைப்
பயன்படுத்தி இதயம் சார்ந்த நோய்களை குணப்படுத்திக் கொண்டு மூன்று குழந்தைகளையும் பெற்றெடுத்து
ஜூனியர் விகடனில் செம்பருத்திப் பூவின் மகத்துவம் பற்றி பேட்டியளித்தார் ஒரு பெண்.
(20 வருடத்திற்கு முன் ஜூவியில் அட்டைப்படத்திலேயே போடப்பட்டது)
2. ஒற்றை அடுக்கு செம்பருத்திப் பூ இருதயத்துக்கு பலம் அளிப்பதில் மிகவும் சிறப்பு
வாய்ந்ததாகும். இந்தப் பூவானது இதயத்தின் பேரிலும், கல்லீரலின் பேரிலும், சிறுநீர்
பையின் பேரிலும் நன்றாக வேலை செய்யக்கூடியது. இதயத்துடிப்பு பலவீனமான குழந்தைகளுக்கு
செம்பருத்திப் பூவின் கஷாயம் அல்லது சர்பத் கொடுத்துவர இதயத்துடிப்பு பலவீனம் நீங்கி
உடல் ஆரோக்கியமாகும். வயது வந்தவர்களுக்கு ஏற்படும் வியாதிக்கும்,
பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனைகளுக்கும் இது அற்புத மருந்து.
செம்பரத்தம் பூ 250,
எலுமிச்சம்பழம் 50, எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து ஒரு பீங்கான பாத்திரத்தில் ஊற்றி,
அதில் செம்பருத்திப் பூக்களை நடுவில் உள்ள மகரந்தத்தை நீக்கி
விட்டு, இதழ்களைப்
போட்டு அமுக்கி வைத்து 24 மணி
நேரம் சென்றபின் பூக்களை மட்டும் நன்றாகப் பிசைந்து சாற்றுடன் கலக்க வேண்டும். மேற்படி
பூச்சாற்றின் அளவு சுத்தமான தேன் கலந்து கொதிக்க
வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சர்பத்தை காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவும்,
இரவு உணவுக்குப் பின்பு ஒரு ஸ்பூன் அளவும் சாப்பிட்டு வர இருதய
நோய்கள், வெள்ளைப்
படுதல், சுயரோகம்,
வெட்டை சூடு, சிறுநீர் எரிச்சல், உதிரப்போக்கு
என்னும் பல நோய்கள் குணமாகும்.
செம்பருத்தியின் மகத்துவம்
அடுத்த இதழில் தொடரும்....
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா