பேட்டியளிப்பவர் : ஜோ.சுரேந்திரன் LTCL, Dean -
Pioneer Music Academy, Mobile: 98401 36288
உரிமைக்குரல்: சிறந்த இசை
மாணவன், உயரிய
இசை ரசனை கொண்டவனாக இருக்க வேண்டும். தேர்ந்த இசையினை ரசிப்பது எப்படி?
சுருங்கக் கூறின் தரமான இசையை கேட்பது எவ்வாறு?
P.M.A. J.S.: தற்போது நம்மில் 90% பேர் அலைபேசி வாயிலாகத்தான் இசையைக் கேட்டு வருகிறோம். MP3 Format-ல் சங்கீதம்
கேட்பது அதன் குரல்வளையை நெறிப்பது போல! 700 M.B. அளவுள்ள குறுந்தகட்டில் 250 பாடல்களை அடுக்குவது, அதன்
தரமுள்ள இசை அடுக்குகளைக் (Music Layers) கேட்க
விடாமல் செய்து விடும். அலைபேசியும் அப்படித்தான்.
2.1 Speakers (ஒலிபெருக்கிகள்)
தான். நாம் இசை கேட்பதற்கு ஏற்றவை. 5.1 Speakers அல்லது 7.1 Speakersகளை
திரைப்படம் பார்ப்பதற்குத்தான் பயன்படுத்த வேண்டும்.
Music/Movie Download கூட 1080 M.P. அல்லது 720 Mega Pixel அளவு இருந்தால்தான் அதன் சிறந்த ஒலி, ஒளி நயத்தை நாம் அனுபவிக்க முடியும்.
உரிமைக்குரல்: சிறந்த ஒலி
பெருக்கிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?
P.M.A. J.S.: 30,000\- ரூபாய் கொடுத்து ஒரு அலைபேசியை வாங்குவதைவிட, ஒரு தரமான ஒலிபெருக்கி சாதனத்தை வாங்கிவிடலாம். விலை அதிகமென்றாலும் Bosch Speakersக்கு ஈடு இணை இல்லை. தனிப்பட்ட முறையில் இசையை ரசித்து உள்வாங்குவதற்கு Apple I-Pod மிகச் சிறந்தது. ஒலி-ஒளி சாதனங்களை வாங்குவதற்கு மாதந்தோறும் வெளியாகும் AV-Max இதழை நாடலாம். Sony Panasonic Audio சாதனங்களுக்கு உகந்ததல்ல.
Pioneer - J.B.L. போன்றவை மிகச் சிறந்த ஒலி வெளிப்பாட்டை வழங்கக் கூடியவை.
நாம் 2000 வாட்ஸ்
ஸ்பீக்கர்களை வாங்கலாம் என்று நினைக்கிறோம். சாதாரணமாக சிறந்த சங்கீதத்தை ரசிக்க 60 வாட்ஸ் போதுமானது. வீட்டில் பொருத்தப்படும், இசைச் சாதனங்களை தக்க பொறியாளர்கள் துணை கொண்டு வீட்டின் நீள அகலங்களை கருத்தில்
கொண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒலிபெருக்கிகளின்
நெறியாள்கை, மிக முக்கியமானது.
Volume-ஐக் குறைத்தே மின்னணு சாதனங்களை
ஆப் செய்ய வேண்டும். சிறந்த இசை மாணவன் ஒலியின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு,
சிறந்த இசை அனுபவத்தை நமக்கு ஏற்படுத்தித் தர இயலும். .... வளரும்....
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா