(16.7.13
அன்று ஓசூர் லேலண்ட் சங்கத்தால் வெளியிடப்பட்ட துண்டறிக்கையில் இருந்து)
உற்பத்தி உயர்வு: நேரடி உற்பத்தியில் 440
(7.3%) நிமிட உற்பத்தியும், குறைவான ஙஉப உள்ள இடங்களில் உற்பத்தித் திறனை உயர்த்துவதன் மூலம் 7.7% சேர்த்து சராசரி உற்பத்தி உயர்வு 15% கொடுக்க முடிவாகி உள்ளது. எண்ணூரில் உள்ளது போல் கண்ட்ரோல் டைம் மெஷின்களில் உணவு
இடைவேளையில் ஆட்கள் மாறி வேலை செய்வது என முடிவாகி உள்ளது. அவுட் சோர்ஸ்,
காண்ட்ராக்ட் மற்றும் இககளை வேலைக்கு எடுப்பது போன்ற மற்ற கோரிக்கைகளை
ஏற்றுக் கொள்ளவில்லை.
சம்பள உயர்வு : சம்பள உயர்வாக அதிகபட்சமாக ரூ.8,500 தான் கொடுக்க முடியும் என்று சொன்ன நிர்வாகத்திடம் கூடுதலாகக் கொடுக்க வேண்டும்
என்று தலைவர் வலியுறுத்தி பேசிய பிறகு ரூ.8,500 சராசரி சம்பள உயர்வாகவும், சில வெல்பேர்களைத்
தனியாக கொடுப்பதாகவும் நிர்வாகம் சம்மதித்துள்ளது. மேலும் சம சம்பளம் கொடுக்க வேண்டியதன்
அவசியத்தைத் தொடர்ந்து தலைவர் பேசியதன் அடிப்படையில்,
அதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஈ.அ. புள்ளிக்கு 49 பைசா என்பதை 13 பைசா
உயர்த்தி புள்ளிக்கு 62 பைசா
உயர்த்திக் கொடுத்துள்ளார். இதுவரை ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் எண்ணூரில் பெற்று வந்த
பைசாவை மட்டுமே ஈ.அ. உயர்வாக நாம் பெற்று வந்தோம். கடுமையான நிதி நெருக்கடி உள்ள சூழலில்,
அசோக் லேலண்ட் வரலாற்றில் இல்லாத வகையில் 13 பைசா உயர்த்தியதுடன் எண்ணூரை விட கூடுதலாக 11 பைசா பெற்றுக் கொடுத்ததும், சராசரி
சம்பள உயர்வில் 30% மட்டுமே
ட.ஊ. சம்பளமாகப் பெற்றுவந்த நிலையில்,
சராசரி சம்பள உயர்வில் பாதித் தொகையை ட.ஊ. சம்பளமாகப் பெற்றுத் தந்ததும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
அடிப்படைச் சம்பளத்தில் ரூ.130\-
சர்வீஸ் வெயிட்டேஜ்-ல் ரூ.618.57, எண்ணூர்
அலவன்ஸ் ரூ.1.71, ஈ.அ.வில்
ரூ.3,203.30, ட.ஊ. கிராஜிவிடி ரூ.664.29,
இதர அலவன்சில் 3,007.13ம், அகபந
அலவன்சில் ரூ.588ம்,
வெல்பேரில் ரூ.287-ம் மொத்தம் சராசரி ஊதிய உயர்வாக ரூ.8,499.90 கிடைக்கிறது. அதிகபட்சமாக ரூ.8,976.56ம் குறைந்தபட்சமாக ரூ.8,232.05 ஊதிய
உயர்வு கிடைக்கும். இக, நக,
உககளை ஒன்றாகச் சேர்த்து எடுக்கவும். உக-ஐ 50 நாட்கள்
வரை சேர்த்து வைக்கவும், பணி ஓய்வின்போது
பயன்படுத்தாமல் மீதம் உள்ள நககளுக்கு பணத்தைத் திரும்ப பெறுவதற்கும் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
அரியர்ஸ் தொகை ரூ.44,064\- என்றும்
23.07.2013 அன்று முதல் தவணையாக ரூ.24,064\-ம், 24.08.2013 அன்று
மீதம் உள்ள 20,000 கொடுப்பதற்கும்
பேசி முடிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் : 562 பேரில் 434 பேரை
முதற்கட்டமாக இடமாற்றம் செய்யலாம் என்றும், மீதம் உள்ள 128 பேரைக்
குறைக்க ஒரு வருடத்தில் ஓய்வு பெற உள்ளவர்களுக்கு அகபந அலவன்ஸ் உட்பட முழு சம்பளத்தைக்
கொடுத்து விருப்ப அடிப்படையில் முன்கூட்டியே விடுவிப்பதாகவும். அப்படிச் செல்வோரின்
எண்ணிக்கை 128க்கு
குறைந்தால் மீதமுள்ளவர்களை இரண்டாம் கட்டமாக இடமாற்றம் செய்யலாம் என்றும் முடிவாகியுள்ளது.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா