ACCL
நிர்வாகம் 11 மாத காலமாக உற்பத்தியை முடக்கி
வைத்திருந்தது. தொழிலாளர்களுக்குச் சம்பளமும் முறையாகக் கொடுக்கவில்லை. தொழிற்சங்கத்
தலைவர் தோழர் ப.ச.நம்பிராஜன் அவர்கள் அசோக்லேலண்ட் உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி
மீண்டும் கம்பெனியில் உற்பத்தியைத் துவக்க வைத்தார். 10.7.13 அன்று அஇஇக தொழிலகத்தின் உயர் அதிகாரிகளான திருவாளர்கள் ஆ.ங.உதயசங்கர், ந.ச.பாலசுப்பிரமணியன், ஆனந்த்
சிங், ய.ஓ.சிங் இவர்களோடு அஇஇக தொழிற்சங்கத் தலைவர் தோழர் ப.ச.நம்பிராஜன் ஆகியோர் முன்னிலையில்
கம்பெனியில் பூஜை போடப்பட்டு, உற்பத்தி தொடங்கப்பட்டது. அஇஇக தொழிலகத்தை மீண்டும் செயல்பட
வைத்த சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் தோழர் ப.ச.நம்பிராஜன் அவர்களுக்கும், சங்க
நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒத்துழைப்பு தந்த தொழிலாளர்களுக்கு நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கிறோம். - சிஐடியு ஆதரவாளர்குழு, அஇஇக, கும்மிடிப்பூண்டி
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா