கி.சுரேஷ் 270/38313, சேசிஸ் அசெம்பிளி
இந்தியாவின் ஆதாரமான நிறுவனங்களில் பொதுத்துறையின் பங்கு
முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு விதமான நலத்திட்டங்களுக்கு உதவியாக பொதுத்துறை நிறுவனங்கள்
உள்ளன. அவ்வாறான ஒரு பொதுத்துறை நிறுவனம் தான் சகஇ என்னும் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன்.
1956ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சர்
காமராஜர் அவர்கள் முன்முயற்சியால் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது இந்த சகஇ. இந்த
சகஇ உருவாக்கத்திற்கு மத்திய மாநில அரசுகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் நெய்வேலியைச்
சார்ந்த 60 கிராமங்களைச்
சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள். இந்த மிகப் பெரிய பொதுத்துறை உருவாக தங்கள் நிலங்களை
அரசுக்கு அளித்தனர். பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் திருக்கோவில்கள் என்று காங்கிரஸ்
கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நேரு கூறினார். ஆனால்,
இன்று அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங்,
சிதம்பரம் & கம்பெனி, லாபகரமாக
இயங்கக்கூடிய ஒரு பொதுத்துறையை, அதுவும்
நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்க துடியாய்த் துடிக்கிறார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய திறந்தவெளி லிக்னைட் சுரங்கமான
நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 2,740 மெகாவாட்
மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலக்கரிச் சுரங்கத்தின் மூலம் சென்ற நிதி
ஆண்டில் ரூ.1460 கோடி
அரசுக்கு லாபமாகக் கிடைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள்,
ஒப்பந்தத் தொழிலாளர்கள், பொறியாளர்கள் என ஏறக்குறைய 36,000 பேர்
பணி செய்கின்றனர். இங்கு அஐபமஇ, இஐபம,
கடஊ உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் உள்ளன. இந்தியாவின் கேந்திரமானதும்,
லாபகரமான இந்த நிறுவனத்தின் 5% பங்குகளைத் தனியாருக்கு விற்பது என்ற முடிவைத் தொழிலாளர்களும்,
தொழிற்சங்கங்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். கடந்த ஜூலை 3லிருந்து தொடர் போராட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடைபெற்றன. இப்போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும்
தொழிலாளர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். பொதுத்துறை பங்குகளில் 10% பங்குகளை பொது பங்காக <டன்க்ஷப்ண்ஸ்ரீ
நட்ஹழ்ங்> ஆக இருக்க
வேண்டும் என நஉஆஐயின் நிபந்தனை. எனவே, விற்கிறோம் என மத்திய அரசு காதில் பூ சுற்றுகிறது. நஉஆஐ என்பது தன்னாட்சி கொண்ட அமைப்பு அல்ல. அது
மத்திய அரசால் உருவாக்கப்பட்டு அதன் கீழ் இயங்கும் அமைப்பாகும். எனவே நஉஆஐ எடுக்கும் முடிவுக்கு நாம் இணங்க வேண்டும்
என்பது அவசியமில்லை. இதே ஐ.மு.கூ. 1 அரசு கடந்த 2004ஆம் ஆண்டில்
சகஇ பங்குகளைத் தனியாருக்கு விற்க முடிவு செய்த போது,
அன்று இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சியில் இருந்ததாலும்,
குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் <இஙட>
பொதுத்துறை பங்குகளை விற்கக்கூடாது என்ற ஷரத்து இடம் பெற்றதால்
அன்று தனியாருக்குத் தாரை வார்ப்பது தடுக்கப்பட்டது. இன்று பிரதான எதிர்க்கட்சியான
பிஜேபிக்கும் காங்கிரசின் பொருளாதாரக் கொள்கை இருப்பதால்,
மத்திய அரசு தைரியமாக பங்குகளை விற்கும் முடிவை எடுக்கிறது.
ஏற்கனவே, கிருஷ்ணா_கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயுவை அம்பானிக்கு கொடுத்ததைப் போல இதையும் 466 கோடிக்கு விற்று அங்கு பணி செய்யும் ஏராளமான தொழிலாளர்களை அடகு வைக்கிறது மத்திய
அரசு.
ஏற்கனவே, ஒப்பந்த
தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் இன்னும் அதை அமல்படுத்தாமல்
காலம் தாழ்த்தும் மத்திய அரசு, தனியாருக்கு
விற்பதில் மட்டும் அக்கறை காட்டுவது, இவர்கள் அப்பட்டமான முதலாளிகளின் விசுவாசிகள் என்பதையே காட்டுகிறது. இந்நிலையில்
தொழிலாளர்களது இடைவிடாத போராட்டங்களாலும், இடதுசாரிகளின் நிர்ப்பந்தங்களாலும் 5% பங்குகளைத் தமிழக அரசு நிறுவனங்களுக்கு அளிக்கலாம் என தமிழக அரசு மத்திய அரசுக்குக்
கடிதம் எழுதியது. மத்திய அரசு 5% பங்குகளை
தமிழக அரசு நிறுவனங்களுக்கு அளிக்க முன்வந்துள்ளது. இது தற்காலிக முடிவாக இருப்பினும்,
பங்குகளை விற்கக்கூடாது என்பது தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின்
நிலையாக இருந்தது. இருந்த போதிலும், தனியார் அல்லாமல் தமிழக அரசு 5% பங்கு பெற்று 400 கோடியை
வழங்கியது NLC தொழிலாளர்களின்
தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஒற்றுமையோடு போராடினால்தான்
எதையும் வென்று எடுக்கலாம். தொழிலாளி வர்க்கம் என்றும் தோற்றதில்லை என்பதை உணரலாம்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா