Thursday, 26 December 2013

தலையங்கம்

தொழிலாளத் தோழர்களே!
      வணக்கம். 8 பக்கங்களில் தொடங்கி, 16 பக்கங்களாக, 24 பக்கங்களாக, தற்போது 36 பக்கங்களாக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்பது இரு மாதங்களுக்கு ஒரு முறையாக வளர்ச்சி பெற்ற உங்களின் உரிமைக்குரல் பத்தாமாண்டில் நடைபோடுகிறது என்றால் அதற்குக் காரணம் தொழிலாளர்களே!
      தொழிலாளர்கள் சிறந்த படைப்பாளர்கள் என்பதற்கு நமது உரிமைக்குரலே சாட்சி. கடும் பொருளாதார நெருக்கடியில் பத்திரிக்கை நடத்துவது சிரமமாக இருந்தாலும், தொழிலாளர்கள் காட்டும் அன்பும், ஆதரவும் அந்த சிரமத்தை தூர எறிந்து நாங்கள் உற்சாகமாகச் செயல்பட உந்து சக்தியாக இருக்கிறது.
      உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் எங்களது நன்றி!

அனைவருக்கும் எங்களது
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல்
நல்வாழ்த்துகள்      !                  


 - உரிமைக்குரல் ஆசிரியர்குழு

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா