Friday, 27 December 2013

ஆரோக்கியமான வாழ சில வழிகள்

E.கருணாகரன்
264/L460
Auto Engine Dressing

      நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் நம் முன்னோர்கள். அது போல் நாம் ஆரோக்கியமாக வாழ சில வழிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
      வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் எனும் முன்னோர் சொல்லுக்கிணங்க, நாள் முழுதும் ஆனந்தமாக வாழ காலை விழித்தெழுந்தவுடன் 10 நிமிடம் நன்றாக வாய்விட்டு சிரிக்க வேண்டும்.       இன்றைய நாகரிகம் உலகில் சனி நீராடு எனும் மூத்தோர் சொல்லை பலர் மறந்து விட்டார்கள். ஆயில் பாத் எடுப்பதில்லை. உடல் உஷ்ணத்தைக் குறைக்க தலையில் உள்ள உறுப்புகள் பலம் பெற ஒரு கரண்டி சுத்தமான நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 15 நிமிடம்(Oil Pulling) கொப்பளிக்க வேண்டும்.
      சீரகம் = சீர் + அகம், உடல் உறுப்புகள் சீராக இயங்க முன்தினம் இரவு ஒரு கரண்டி அளவு சீரகத்தை வறுத்து வெந்நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் பற்களைச் சுத்தம் செய்த பின் ஒரு டம்ளர் சீரகத் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசனம் செய்ய வேண்டும். உணவில் காய்கள், கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
      வைத்தியனுக்கு கொடுப்பதை வணிகனுக்குக் கொடு எனும் மூதாதையர் சொல்லுக்கேற்ப, மதிய உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பாக சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் உணவு நன்றாக ஜீரணமாகும். நரம்புகளுக்கு நேரடியாக சக்தி கிடைக்கும் அல்லது ஆகாரம் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்பு மஞ்சள் வாழை அல்லது மற்ற கனிகள் சாப்பிட வேண்டும்.
      உணவு சாப்பிடும் போது நேரடியாகவோ அல்லது அலைபேசியிலோ மற்றவருடன் பேசாமல் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 10 நிமிடமாகவது கண்களை மூடி அமர்ந்து நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என மனதுக்குள் நினைக்க வேண்டும்.
என்ன... நண்பர்களே... ஆலோசனைகளை ஏற்று கடைப்பிடியுங்கள்.

ஆரோக்கியமாக வாழ்வோம்! வெற்றிகள் ஈட்டுவோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா