Thursday 26 December 2013

My பேனா சிந்திய 'மை'

தன.சம்பத் 255/J144

தொன்மை முதல் அண்மை வரை
ஆளுமை கொண்டவன் தான் மேன்மை பெற
நம்மை அடிமைகளாக்கும்
தன்மையாய்த் தான் இருப்பான்.
உண்மையே கருத்து வேற்றுமை இல்லை
நம் இல்லாமை போக்கி செழுமை பெற
நமக்குள் பகைமை பாராட்டாத
ஒற்றுமையின் வலிமையே முதன்மை
நம் உடைமையும் உரிமையும் நிலைத்திட
தாய்மை குணம் கொண்டு இமை போல் காத்து
பதுமை போல் இன்றி வலிமையாய்ப் போராடி
நேர்மையாய் தன் கடமை ஆற்றி
வாய்மையுடன் வாதிடும் தலைமை நமக்கிருந்தால்
வெறுமையிலிருந்து மீண்டு வறுமையை வென்று
சீர்மை பெறும் நிலைமை வரும்.
நம் வாழ்வும் இனிமை பெறும்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா