Healer R.மாதவன் D.E.C.E., M.Acu
353\37026 செல்: 9840732871
அயோடின் :
353\37026 செல்: 9840732871
அயோடின் :
அயோடின் என்பது ஒரு தாதுப் பொருளாகும். இந்தத் தாது உப்பு மண்ணில் இருந்து விளையும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் அந்தந்த உணவுப் பொருளின் தன்மைக்கேற்ப கலந்துள்ளது. எந்த ஒரு உணவுப் பொருளும் அது இயற்கையாக விளைந்தால்தான் உணவு. இப்போது அயோடின் என்ற தாது உப்பை உணவுச் சமையலில் மிகவும் முக்கிய பொருளான உப்புடன் சேர்த்துள்ளனர். உப்பு இயற்கையான உணவாகும். அயோடின் இரசாயனமாகும். இயற்கையான உணவுச்சத்துகள் உயிருக்கு உயிர் ஊட்டக்கூடியவை. இரசாயனக் கலைவையான அயோடின் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
``தைராய்டு'' என்ற நோயிலிருந்து பாதுகாக்க இயற்கையான சமையல் உப்பில் இரசாயன அயோடின் சேர்க்கப்படுகிறது. ``தைராய்டு'' என்பது கழுத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள ஒரு சுரப்பியாகும். அது சுரக்கும் நீர் தைராக்சின் ஆகும். இந்த தைராக்சின் என்ற சுரப்பு நீர் உடல் வளர்ச்சிக்கும், இயக்க சக்திக்கும் மிகவும் இன்றியமையாதது ஆகும். தைராய்டு சுரப்பு நீர் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரந்தால் உடல் உறுப்புகளின் இயக்கம் மிகவும் அதிகமாகவோ அல்லது குறைந்தோ விடும். உடலில் அயோடின் அளவு அதிகரித்தால் தைராய்டு வீக்கமும், பெருக்கமும் அதிகரிக்கும்.
அயோடின் இயற்கை உணவிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதை மீறி சமையல் உப்பில் அயோடின் கலக்கும்போது அந்த உணவு தைராய்டு உறுப்பை நேரடியாகப் பாதிக்கும். அயோடின் உப்புக்கு மிகவும் தூண்டப்பட்டதாக இருக்கும் தைராய்டு சுரப்பி தன் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கிறது. அதனால் தாங்க முடியாத பசி இருக்கும். தாகம் அதிகரித்து, சாப்பிட்டதில் இருந்து தண்ணீர் குடித்துக்க கொண்டே இருப்பார்கள். சாப்பிடும் போது அதிகப்படியான வியர்வையும் ஏற்படும். அயோடின் உப்பையே தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் தைராய்டு சுரப்பு நீர் மிகவும் குறைவாக சுரக்கும் அதனால் மனதில் சோர்வு, இனம்புரியாத பயம் இருக்கும். இதனால் உணவில் அயோடின் கலந்த உப்பைத் தவிர்த்துக் கொண்டு சாதாரண சமையல் உப்பையே பயன்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா