Sunday, 27 April 2014

அடிப்படை உரிமை

பிரேம் N..பிரேமராசன் B.Sc., B.L.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் அடிப்படை உரிமைகள் முக்கியமான பங்கு வகிப்பவை. அதில் பிரிவுகள் 14, 19, 21 மூன்றும் முக்கியமானவை. அதை கோல்டன் டிரை ஆங்கிள்ஸ் (Golden Triangles) என்று குறிப்பிடுவர்.

பிரிவு 14 : உவ்ன்ஹப் தண்ஞ்ட்ற்ள் _ சம உரிமைகள் : சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் கிடையாது. இது ரூல் ஆப் லா (Rule of Law) என்று இங்கிலாந்தில் அழைக்கப்பட்டது. திருமதி.மேனகா காந்தி _ பாஸ்போர்ட் வழக்கும் திருமதி.இந்திராகாந்தி _ ராஜ்நாராயணன் தேர்தல் வழக்கும் இப்பிரிவின்படி போடப்பட்டு முக்கியத்துவம் பெற்றது.

பிரிவு 19 : இது ஆறு சுதந்திரங்களைக் குறிப்பிடுகிறது. பேச்சுரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, குடியுரிமை, இந்தியாவில் எங்கும் செல்ல உரிமை, வேலை, தொழில் செய்யும் உரிமை. தன் கருத்துகளை நல்ல முறையில் பேசவோ, எழுதவோ அல்லது பேசாமல் அமைதியாக இருக்கும் சுதந்திரமும் இதில் அடங்கும். Right not to speak, Freedom to observe silence.. இதில் தேசிய கீதம் வழக்கு முக்கியமானது. தேசிய கீதம் பாடும்போது சில குழந்தைகள் தேசிய கீதம் பாடாமல் மௌனமாக இருப்பது வழக்கானது. கூட்டம் போடுவது, கூடுவது, எந்த ஒரு இடையூறு இல்லாமல் அமைதியாக செல்வது, ஊர்வலம் நடத்துவது இவையும் இப்பிரிவில் அடங்கும். சங்கம் அமைப்பதும் சில வரைமுறைகளுக்கு உட்பட்டது. அதே போன்று தொழிலைத் தொடங்கவும், தகுந்த காரணத்துடன் மூடவும் உரிமை உண்டு. ஆனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் தொழிலை நடத்தும் உரிமை இல்லை.

பிரிவு 21 : இது வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும் உறுதி அளிக்கும் பிரிவு. இப்பிரிவு அடிப்படை உரிமைகளில் இதயம் போன்றது. வாழ்க்கை மனிதனுக்கு முக்கியமானது. வாழும் உரிமை இயற்கையானது. இந்தப் பிரிவின்படி போடப்பட்ட வழக்குகளில் அ.ஓ.கோபாலன் கைது வழக்கு, திருமதி.மேனகா காந்தி பாஸ்போர்ட் வழக்கு முக்கியமானவை. மேனகா காந்தி வழக்கில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. அவர் பிரிவு 21_ஐ மீறுவதாக வழக்கு தொடர்ந்தார். ஆனால் உச்சநீதிமன்றம் பொதுநலன் கருதி பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் இதில் பிரிவு 21 விதி மீறல் இல்லை என தீர்ப்பளித்தது. மேலும் தனி மனித சுதந்திரம், வாழும் உரிமை, இறக்கும் உரிமை, கல்வி கற்க உரிமை, சுத்தமான காற்று, நீர் பெற உரிமை என பல உரிமைகளும் உண்டு. இப்போது நமது அரசு ரூ.10\_க்கு தண்ணீர் விற்கிறது. ஆனால், சட்டமோ கலப்படமின்றி சுத்தமான காற்றையும், நீரையும் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறுகிறது. இப்படி முக்கியமான அடிப்படை உரிமைகளை நாம் அறிந்து வைத்திருப்பது நமக்கும், நாட்டுக்கும் நல்லது.

<அடுத்த இதழில் சந்திப்போம்!>

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா