Sunday, 27 April 2014

சர்க்கரை (நீரிழிவு) வியாதிக்கு

அனுபவ மருந்துகளும், உணவில் மருந்துகளும்

இந்த வியாதியை நுணுக்கமாக கவனித்துப் பார்த்தால் முன்பே கூறியது போல், இரத்தத்தில் சர்க்கரை என்பது, உப்பு போன்றதுதான். ஆகவே இவர்கள் எந்த மாதிரியான உடலுள்ளவர்களாக இருந்தாலும் <வாத, பித்த, கபம்> அவர்கள், புளிப்பு உணவுகளை நிறுத்துவது அல்லது குறைப்பது நல்லது. தனித்து புளிப்பு உணவைச் சாப்பிடக் கூடாது. ஒரு சிலருக்கு கசப்பு உணவான வேப்பிலை, ஆடுதீண்டாபாளை, சிறியாநங்கை, பாகற்காய், வெந்தயம் போன்றவற்றைச் சாப்பிட சர்க்கரை குறையும். இன்னும் சிலருக்கு துவர்ப்பான உணவான நெல்லிக்காய், கடுக்காய், நாவற்கொட்டை போன்றவை சாப்பிட குறையும். அதாவது வாத உடம்புள்ளவர் <குண்டான இறுகிய> துவர்ப்பு சுவையுள்ள உணவுகளைச் சாப்பிட்டால் அவருக்குப் பொருந்தாது. பித்த உடம்புள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, மூன்று விதமான உடல்வாகுடையவர்களுக்குத் தகுந்தாற்போல் மருந்துகளைக் கையாள வேண்டும். 1. குண்டான இறுகிய வாத உடம்புடையவர்களுக்கு இயற்கையிலேயே எண்ணெய்ச் சத்து <கொழுப்புச்சத்து> மிகுந்திருக்கும். 2. ஒல்லியான பித்த உடம்புடையவர்களுக்கு இயற்கையிலேயே உப்பு சத்து மிகுந்திருக்கும். 3. குண்டான இறுக்கமல்லாத தளர்ந்த உடம்புடையவர்களுக்கு <கபம் உடம்பு> இயற்கையிலே நீர்ச்சத்து மிகுந்திருக்கும். 


இது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பொருந்தும். ஆகவே இந்த உடல்கூறுக்கு ஏற்றவாறு மருந்து உட்கொள்ள வேண்டும். பரம்பரை வியாதி என்பது இந்த முறையில் அடங்கும். ஆகவே மேற்கூறிய உடல் தத்துவத்தைப் புரிந்து கொண்டால் வியாதியைத் தீர்ப்பதற்கு சுலபமாக இருக்கும். நோய் வேறு, பிணி வேறு, சீக்கு வேறு, வியாதி வேறு. நோய் என்பது குறிப்பிட்ட இடத்தை மட்டும் தாக்கும். வேறு பாதிப்பு இருக்காது. பிணி என்பது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இடத்தில் எல்லாம் பாதிப்பு ஏற்பட்டு பிணைந்திருக்கும். சீக்கு என்பது ஒரு நோய்க்கு மருந்து கொடுத்தால் வேறு ஒரு நோய் தாக்கும். வியாதி என்பது உடம்பு முழுவதும் வியாபித்திருக்கும். தலை முதல் கால் பாதம் வரை உள்ளும் புறமும் கலந்து இருக்கும். அதனால்தான் சர்க்கரை வியாதி எனும் பொருள்படுத்தி சொல்லியுள்ளார்கள். அதனால்தான் சித்தர்கள் காலத்திலேயே எண்ணெய்த் தேய்த்து குளிக்கும் முறையைச் சொல்லியிருக்கிறார்கள். எண்ணெய்க் குளியல் என்பது நோய், பிணி, சீக்கு, வியாதி இவைகளுக்கு ஏற்றார்போல், சில மூலிகைகளின் சாறு, சில மூலிகைகளின் விதைகள், பூக்கள், வேர்கள், பட்டைகள் போன்றவைகளை எண்ணெயுடன் கலந்து காய்ச்சும் எண்ணெய்கள் இருக்கின்றன.

ஆதாரம் : ``உயிர்நாடி'' மாத இதழ், நவம்பர் டிசம்பர் 2006, ஆசிரியர் ம.சேதுராமன், சித்த மருத்துவர், பசும்பொன் நகர், மதுரை.

எத்தகைய உடல் வாகுடையவர்கள், எப்படிப்பட்ட எண்ணெய்க்குளியலை மேற்கொள்ள வேண்டும் என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்...

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா