நமது சங்கத் தலைவர் திரு.R.குசேலர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பெற்று ஏப்ரல் 9, 10,
11 தேதிகளில் வியட்நாமில் நடைபெற்ற ஜப்பான் கவுன்சில் மெட்டல்
பெடரேசன் மாநாட்டிலும் Industrial All Global Union Seventh Asia Metal
Federation மாநாட்டிலும் WPTUC சார்பில் பங்கேற்ற
நமது ALEU சங்கப் பொதுச் செயலாளர் திரு.K.முருகப்பிரேமன், சங்கச் செயற்குழு
கூட்டத்தில் அம் மாநாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன் விபரம் :
வியட்நாம் நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்த மிகப் பெரிய கம்யூனிஸ்ட்
போராளி தோழர் ஹோசிமின் பெயரால் அமைந்துள்ள ஹோசிமின் நகரத்தில் மாநாடு நடைபெற்றது.
ஏப்ரல் 9 அன்று எலக்டிரிகல்,
எலக்ட்ரானிக்ஸ் தொழிலகங்களில் தொழிற்சங்கங்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், கொரியா உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்றன. இந்தக் கலந்தாய்வில்
உலகளாவிய சங்க நடவடிக்கைகள் பற்றியும், தற்போது ஏற்பட்டுள்ள
மாற்றங்கள் பற்றியும், அதை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றியும், அவர்களை ஒரு அமைப்புக்குள் கொண்டு வருவது பற்றியும்,
அந்தந்த நாடுகளில் உள்ள தொழிற்சங்க சட்டங்கள், அதை அமுல்படுத்த அந்தந்த தொழிற்சங்கங்கள் எடுத்த நடவடிக்கைகள்
குறித்தும் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதற்கான இயக்கங்களை உலகளாவிய தொழிற்சங்க
கூட்டமைப்புக்குத் தெரிவித்து, காண்ட்ராக்ட் முறையை
ஒழிப்பது, காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதற்கான
முடிவெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தொழிற்சங்கக் கொள்கை பற்றியும்,
தற்காலத்திற்கேற்ப நடவடிக்கைகளை வரையறுத்து, இதில் முன்னுரிமை அடிப்படையில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்ல
முற்படுவது என முடிவெடுக்கப்பட்டது. அன்றைய தினம் மாநாடு இனிதே முடிவுற்றது.
ஏப்ரல் 10, 11 தேதிகளில் ஏழாவது
தெற்காசிய உலோகத் தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 15 நாடுகள் பங்கேற்றன. இம்மாநாட்டில் உலோகத் தொழிற்சாலைகளின் தற்போதைய நிலைமைகள்,
செயல்பாடுகள், வேலை வாய்ப்பை
தக்க வைத்துக் கொள்வது, அமைப்புசாரா தொழிலாளர்களை
ஒற்றுமைப்படுத்துவது, மேலும் பலப்படுத்துவது, ஒப்பந்தத் தொழிலாளர்கள் லாஜிஸ்டிக் மற்றும் அவுட்சோர்சிங் ஏஜென்சீஸ்
தொழிலாளர்கள் அவர்களது ஊதியம், மருத்துவப் பாதுகாப்புகள்,
அவர்களது தற்போதைய நிலை அனைத்தும் விவாதிக்கப்பட்டன. அதன்பின்னர்,
அனைத்து ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய தொழிற்சாலைகளின் மாநாட்டு
தயாரிப்புக்காகப் பேசப்பட்டது.
முன்பு ஐஙஊ (ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப்
ஙங்ற்ஹப் ஊங்க்ங்ழ்ஹற்ண்ர்ய்) ஆக இருந்த கூட்டமைப்பு,
தற்போது உலோகத் தொழில்கள் மட்டுமல்லாது மின்சாரம், மருந்து போன்ற தொழில்களை உள்ளடக்கி ஐய்க்ன்ள்ற்ழ்ண்ஹப் அப்ப்
எப்ர்க்ஷஹப் மய்ண்ர்ய் ஆக உருவெடுத்துள்ளது. இதன் மாநாட்டை ஜப்பான் கவுன்சில் மெட்டல்
பெடரேசன் முன் கை எடுத்து நடத்தியது.
இம்மாநாட்டில்
நமது செயலாளர் ஆற்றிய உரை
``எங்கள் நாட்டில் ஒரிரு ஆண்டுகளுக்கு முன்பே, காண்டிராக்ட் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியம் ரூ.10,000\-
அவர்களுக்கு உநஐ, டஊ உத்திரவாதப்படுத்துவது,
அவர்களை நிரந்தரப்படுத்துவது என்ற கோரிக்கைகளை முன் வைத்து வாயிற்கூட்டங்கள்,
துண்டறிக்கைகள், வேலை நிறுத்தங்கள்
உட்பட செய்து கொண்டிருக்கிறோம். நான் எங்கள் நாட்டில் மட்டும் இப்பிரச்சனை உள்ளது என்று
நினைத்தேன். இது உலகளாவிய அளவில் உள்ளது என்பதை இப்போது தெரிந்து கொண்டேன்.
உலகமயம் (கடஎ) மூலம் உலகில் எந்தக் கோடியில் இருந்தாலும் எங்கும் தொழில் தொடங்க
முடியும் என்ற நிலை வந்த பின் அமெரிக்கா, ஐரோப்பிய,
ஜப்பான் நாடுகளுடைய நிறுவனங்களின் தாக்குதல், உலகில் உள்ள ஏனைய அனைத்து தொழில் நிறுவனங்களையும் நிலைகுலையச்
செய்துள்ளன. எங்களைப் பொறுத்தவரை இதற்காக நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு நன்றி.
உங்களின் மூலம் பகிர்ந்து கொண்ட செய்திகள், கருத்துக்கள், உண்மைகள் எங்களுடைய சங்க நடவடிக்கைகளுக்கு
உபயோகமாக இருக்கும். ஆனால் அவரவர் தொழில்களுக்கு சம்பந்தப்பட்ட, உதாரணமாக நான் ஆட்டோமொபைல் நிறுவனத்தைச் சார்ந்தவன். அமெரிக்காவின்
போர்ட், ஐரோப்பாவின் பென்ஸ், வோக்ஸ்வேகன், ஜப்பான் சுசுகி,
கொரியாவைச் சார்ந்த ஹூண்டாய் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனத் தொழிற்சங்கப்
பிரதிநிதிகள் இம்மாநாட்டில் சந்தித்துக் கொண்டு, பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளும்போது, இம்மாநாட்டின் பங்களிப்பு பயனுள்ளதாகவும், புரிதல் உள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு
ஆர்வத்துடன் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டு செயல்பட உத்வேகம் உள்ளதாகவும் இருக்கும்''
என எண்ணுகிறேன். அதற்கு ஆவண செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு நமது செயலாளர் பேசிய போது அரங்கில் உள்ள அனைத்துப் பிரதிநிதிகளும் இதை வரவேற்றுப்
பாராட்டினார்கள்.
வியட்நாம் நாடு
பற்றி சில குறிப்புகள்
வியட்நாமின் ஹோசிமின் நகரம் மிகவும் தூய்மையாகக் காணப்படுகிறது.
வியட்நாம் மக்கள் சுறுசுறுப்பானவர்கள். அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்கள். வியட்நாம் நாணயம் `டாங்குகள்' என அழைக்கப்படுகிறது.
ஒரு ரூபாய்க்கு 351 டாங்குகள் கிடைக்கும்.
1956 முதல் 76 வரை வியட்நாம் கம்யூனிஸ்ட்
நாடாக மாறிவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்கா தனது ராணுவத்தை நிறுத்தி கடும் கொடுமைக்குள்ளாக்கியது.
ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர் ஹோசிமின் அவர்களின் வழிகாட்டுதலில் செயல்பட்ட இளைஞர் குழுக்கள்,
கொரில்லா போர்முறை மூலம் அமெரிக்க ராணுவ ஆதிக்கத்தைத் தோற்கடித்தன.
இப்போரில் 2 இலட்சம் வியட்நாம் மக்களும் அமெரிக்க ராணுவத்தினர்
58,000 பேரும் உயிரிழந்துள்ளார்கள்.
வியட்நாம் கொரில்லா போராளிகள் தரைக்கு அடியில் 3 அடுக்குகளைக் கொண்ட (10 அடி, 20 அடி, 30 அடி) சுரங்கப் பாதையை அமைத்து, அதில் தங்கள் வாழ்க்கையை நடத்தி, இரவுகளில் விவசாயம் பகலில் பூமிக்கு அடியில் இருந்து கொண்டு தரையின் மேற்பகுதியில்
அமெரிக்க ராணுவத்தோடு போரிட்டனர். இறுதியில் வெற்றி பெற்றனர். அமெரிக்க ஏகாதிபத்யத்தின்
கனவு தகர்ந்தது. வியட்நாம் கம்யூனிஸ்ட் நாடானது.
நன்றி : இம்மாநாட்டில்
கலந்து கொள்ள வாய்ப்பளித்து, இவ்வளவு அரிய விஷயங்களை
நான் தெரிந்து கொள்ள, உணர்ந்து கொள்ளச் செய்த நமது அகஉம சங்கத்
தலைவர் திரு.ஆர்.குசேலர் அவர்களுக்கும், ரடபமஇக்கும்
எனது மனமார்ந்த நன்றி!
- K.முருகப்பிரேமன், பொதுச்செயலாளர்
அசோக்லேலண்ட்
தொழிலாளர் சங்கம்
எண்ணூர், சென்னை - 57.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா