Friday, 20 June 2014

என்று விடியும் பொழுது

M. ஆதிகேசவன்
264\K066

      தி.நகர், ரங்கநாதன் தெரு, இரவு 9 மணி. அதிக கூட்டமில்லை, நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண்; மெலிந்த தேகம்; மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம். அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தேன். எந்த ஊர் நீங்க?... திருவண்ணாமலை பக்கம்.... திருநெல்வேலிக்காரங்க நிறைய இருப்பாங்கல்ல... இப்போ அப்படி இல்ல, அவங்க எல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க. இங்க நாங்க திருவண்ணாமலை புள்ளைங்க நிறைய பேரு இருக்குக்கோம். 150 பேராச்சும் இருப்போம்.
      தினமும் காலையில் 9 மணிக்கு வரணும், நைட் 11 மணிக்கு முடியும். அப்படின்னா 14 மணி நேரம்வருதேங்க, கிட்டத்தட்ட 2 ஷிப்ட்... ஷிப்டா, அதெல்லாம் தெரியாது, காலையில் போனனா நைட் வரணும். சாப்பாடு? கேண்டீன் இருக்கு, கொஞ்சம் கொஞ்சம் பேரா சாப்பிட்டுவிட்டு வருவோம். எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க! நைட் 12 மணி ஆயிடும். காலையில் எழுந்ததும் வந்துடுவோம். உங்களுக்கு எவ்வளவு சம்பளம்? ரூ.5,500\-
      அடுத்தடுத்த தளங்களிலும் இதுபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள்; அவர்கள் உழைப்பை உறிஞ்சி நிற்கும் பிரம்மாண்ட கட்டிடங்கள் சவக்கிடங்குகளாய் தோன்றியது. என்று விடியும்... இவர்களின் பொழுது?

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா