Friday, 20 June 2014

ஏழைக்கோர் கீதை

M. பழனி
செம்பிய மணலி
9952445378

ஏழையே ஏன் சோர்ந்து விட்டாய்
வறுமையில் வாடும் உனக்கு
உயர்வு இல்லையே என்று வருந்தாதே!
வறுமையின் எல்லையில் விழுந்தவர்கூட
உயர்ந்திட்ட வரலாறு உண்டு!
தெருவிளக்கின் கீழ் படித்தவர்கள்
ஒளிவிளக்காய் ஆனதுண்டு!
நான் ஒரு கீதை உரைப்பேன்
உன் உழைப்பின் கூலியை
எங்கோ ஓடி வீணாகும் நீராக்காதே
குதிரைகள் வளர கிண்டிக்குப் போகாதே!
உன் குழந்தைகள் வளர
உண்டிக்கு செலவு செய்!
கள்ளுக்கும் சாராயத்துக்கும் தராதே!
நெல்லுக்கும் ஆகாரத்துக்கும் கொடு!
உன்னைக் கெடுப்பது `மது'
அதனில் ஏன் மீண்டும் மீண்டும் விழுகிறாய்
எழுந்துவா மனிதா!
புத்தகத்தை உன் கரங்கள் தொட்டிராவிட்டாலும்
உன் பிள்ளைகள் நாளை
புத்தகம் எழுதட்டும்!
வறுமையே இல்லாத பூமி...
எல்லார்க்கும் எல்லாமும்
கிடைக்கும் சமுதாயம்...
நிச்சயம் உருவாகும்!
ஒரு கை இரு கை
ஒரு கோடிக் கை
அதற்காகப் போராடும்
நீயும் வா...! இணைத்துக் கொள்!
புதியதோர் உலகு படைப்போம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா