Saturday, 28 June 2014

விசேஷ செய்திகள் வாசிப்பது...

அனந்த நாராயணன்
 275\க192


  • தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் `ரெட் சொசைட்டி'யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து அறிய 9842062501, 9894067506 என்ற எண்களைத் தொடர்பு கொண்டால் போதும்.
  • பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை வேண்டின் அதை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டிட்யூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கிறது. விபரங்கள் பெற 9916737471 எண்ணில் அழைக்கவும்.
  • குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம் வாகனம் ஓட்டும் உரிமை போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் இருக்கும் அஞ்சல் பெட்டியில் இட்டு விடுங்கள், அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சல் செலவுத் தொகையை, சம்பந்தப்பட்டவரிடம் அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.
  • இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாம்.
  • Imitinef Merciliet என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்தலாம். இது அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கிறது. தொலைபேசி: 044_24910754
  • அடுத்த பத்து வருடங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10 டிகிரி உயர்ந்து, அதிக வெப்பமாக பூமி இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டன. இப்போது நாம் புவி வெப்பமயமாதலை எதிர்த்து போராட வேண்டிய நிலையில் உள்ளோம். ஆகவே நம்மால் முடிந்தவரை மரங்கள் நட்டு வளர்த்து அதைப் பேணிக் காக்கலாம். நீர், மின்சாரம், பிற சக்திகளை தேவை இல்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமலும், அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம். புவி வெப்பமயமாதலைத் தடுக்க நம்மால் முடிந்ததை செய்வோமே! 

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா