Saturday, 28 June 2014

ஓசூரில்... ஒப்பந்தத் தொழிலாளியின் அவலநிலை

ஓசூர் மிகப்பெரும் தொழில்கள் நிறைந்த நகரமாக மாறியுள்ள நிலையில் அசோக்லேலண்ட், டிவிஎஸ் தொழிற்சாலைகள் மற்றும் இவை சார்ந்த சிறு, குறுந்தொழிற்சாலைகள் அனைத்திலும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரமற்ற ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு வேலை பாதுகாப்பு, போதிய சம்பளம், மருத்துவ வசதிகள், டஊ, உநஐ, ஏதுமற்ற நிலையில் ரூ.5,000\_ முதல் ரூ.7,500\_ வரை சம்பளத்துடன் 10 மணி, 12 மணி நேரமெனக் கடுமையாக உழைக்கின்றனர்.

அசோக் லேலண்ட் யூனிட் ஐ, ஐஐ இரண்டிலும் நிரந்தர தொழிலாளர்களுக்கு சமமான எண்ணிக்கையில் ஒப்பந்தத் தொழிலாளர்களும் வந்து செல்கின்றனர். குறிப்பாக, சொடக்கோ மெக்லன், எஸ்பிஎஸ், எஸ் ஐ பைப்லைன், டிவிஎஸ் லாஜிஸ்டிக் என பல கம்பெனிகளில் கான்டிராக்ட் தொழிலாளர்களும் மிக மோசமான சூழ்நிலையிலேயே பணிபுரிந்து வருகின்றனர். இந்தக் கம்பெனிகள் பல தொழிலாளர்களுக்கு டஊ, உநஐ செலுத்துவதில்லை. இந்நிலையில், சமீபத்தில் அசோக் லேலண்ட் யூனிட் ஐஐல் ஒப்பந்தத் தொழிலாளி விஜயராகவன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் மணிக்கட்டு துண்டிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்நிலையில் சிஐடியு சங்கம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனரிடம் இந்த விபத்து குறித்தும், உடனடியாக அவருக்கு சிகிச்சை, இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை அசோக் லேலண்ட் நிறுவனம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையோடு ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணிப்பாதுகாப்பு, பணி நிரந்தரம், டஊ, உநஐ, குறைந்த பட்ச சம்பளம் ரூ.10,000க்கும் மேல் என வரன்முறை படுத்த வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் தோழர்.பீட்டர் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும், அசோக் லேலண்ட் யூனிட் ஐஐ தொழிலக வாயில் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு_வின் மாவட்டத்தலைவர் தோழர்.ஸ்ரீதர், துணைச் செயலாளர் சாதிக் பாட்சா, அகஉம ஓசூர் யூனிட் ஐஐ சங்கத் துணைத் தலைவர் மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா