Friday, 20 June 2014

சிட்டுக் குருவிகள்

R.இளம்வழுதி
250\L754

என் வீட்டு முற்றத்தில்
மீண்டும் சிட்டுக் குருவிகள்
படம் பிடிக்க
செல்போன் எடுத்தேன்.
பறந்து போயின
சிட்டுக் குருவிகள்!
வரகு, கம்பு, திணை கதிர்களை
உத்திரத்தில் கட்டி வைத்தால்
சிட்டுக்குருவி வரும் என்றார்கள்...
ஊருக்குச் சென்றிருந்தேன்
அம்மாவிடம் திணைக்கதிர்
கிடைக்குமா என்றேன்
திணை விளைந்த நிலம்
ரியல் எஸ்டேட் மனைகளாகிப் போனது
என்றார்!
சிட்டுக்குருவிகள்
காணாமல் போன

காரணம் புரிந்தது!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா