Wednesday 20 August 2014

வெற்றியின் பாதை

R.பத்மநாபன்
760\L054
தலைவர், உழைப்போர்
உரிமைக் கழகம்

இன்றைய சமூக நிலையில் மனித எண்ணங்களில் பலவித சிந்தனை மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால், உளவியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன. உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் மனிதன், அன்றாட நிகழ்வுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கின்றான். சிலர் எதிலும் ஈடுபடமுடியாமல் அமைதியாகி விடுகின்றனர். பலர் பலவித எதிர்விளைவுகளுக்கு உள்ளாகின்றனர். இதனால் மனச் சிதைவும், தற்கொலை எண்ணங்களும் ஏற்படுகின்றன.


சமூகத்தில் ஏற்பட்டுள்ள கலாச்சார நிகழ்வுகளே இதற்குச் சான்று. தனிமனிதப் பொருளாதாரம் சமூக பொருளாதாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாததும் இப்பிரச்சனைக்கு ஒரு காரணம். இதை எதிர்கொள்ள மனிதன் இதற்கான காரணங்களை சமூகத்தில் இருந்து அகற்ற, அதை எதிர்த்து வெற்றியடைய முயற்சிக்க வேண்டும்.

உலகமயம், தனியார்மயம் உலகளாவிய சந்தைமுறை இவைகளால் ஏற்படும் சமூக அமைதியின்மையை எதிர்கொண்டு புதிய சமூகம் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் மனதில் தோன்றும் உளவியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.

இத்தகைய உளவியல் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அதன் காரணிகளை வேரோடு அகற்றவும் சமப் பங்கீட்டு முறை சமூகம் உருவாக வேண்டும். அப்படி உருவானால்தான் மனிதனின் சமூக உறவுகள் மனிதத் தன்மையுடன் தொடரும் என்பதே வெற்றியின் பாதை!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா