Wednesday 20 August 2014

P.F.வைப்பு நிதி _ ஒரு சிந்தனை

S.உதயக்குமார்
629\F290
Mobile: 9840199207

PF என்று எல்லோராலும் பொதுவாகச் சொல்லப்படும் வைப்புநிதி சட்டமாக்கப்பட்டது 1952ல். சட்டமாக்கப்பட்டதன் நோக்கம் மிகப் புனிதமானது. தொலைநோக்கு சிந்தனை கொண்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்றால், ஒரு தொழிலாளி வயதான பின்னர், தனது உடல் ஒத்துழைக்காமல் போகும்போது, அவருக்குப் பொருளாதார ரீதியான உதவி செய்ய ஒரு நிதியை ஏற்படுத்தி, அந்த நிதிக்கு அவர் வேலையில் சேரும் இளம் வயதிலேயே, அதாவது வேலையில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே ஒரு சிறு தொகையை அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து, ஓய்வு பெறும்போது பெரும் தொகையாக அவருக்கு அளிப்பது என்பதே!



சுருக்கமாகச் சொன்னால், ஒரு தொழிலாளி ஓய்வுக்குப் பிறகு கௌரவமாகவும், சொந்தக் கால்களில் நிற்கவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பாரமாக இல்லாமல் வாழ்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட நிதியே PF நிதி. ஒரு தொழிலாளி வாழ்க்கையின் முக்கியமான கடமைகளை நிறைவேற்ற இந்நிதியில் இருந்து பணம் எடுக்க சட்டமே அனுமதியளிக்கிறது. உதாரணமாக திருமணத்திற்கும், வீட்டுமனை வாங்கவும், வீடு கட்டவும், வீட்டை விரிவுபடுத்தவும், வீட்டுக் கடனை அடைக்கவும், மருத்துவச் செலவுக்காகவும், பிள்ளைகள் படிப்பிற்காகவும் இந்த நிதியைப் பயன்படுத்தலாம்.

நமது தொழிலகத்தில் 75% பேர், இந்த நிதியை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துகின்றனர். எஞ்சியவர்கள் இந்த நிதியை அபங போல் பயன்படுத்துகின்றனர். அவர்களைச் சிந்திக்க வைப்பதற்கான முயற்சிதான் இக்கட்டுரை. ஒரு சிலருக்குப் பணத் தேவை என்றாலே நினைவுக்கு வருவது டஊ தான். இத்தகையவர்களின் ஓய்வுக்காலம் தான் சிரமத்திற்கு உள்ளாகிறது. வாழ்க்கையை நடத்த முடியாமல் இவர்கள் படும்பாடு பெரும் பரிதாபத்திற்குரியது.

நம்முடைய தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் சில மாதங்களுக்கு முன்னர் பணத்தை எப்படிக் கையாள்வது, எங்கு முதலீடு செய்வது என்று ஒரு நாள் வகுப்பு எடுக்கிறார்கள். இது தலை மொத்தமும் வழுக்கையான பிறகு சீப்பு கொடுப்பது போல் உள்ளது. முன்னதாகவே தொழிலாளர்கள் விழிப்புணர்ச்சி கொள்ள வேண்டும் என்பதற்காகவே, எனது இந்தக் கட்டுரை முயற்சி.

சமீபத்தில் ஓய்வு பெற்ற நமது சக தொழிலாளி ஒருவர், வைப்பு நிதி தொகையாக ``33 லட்ச ரூபாய்'' பெற்றுச் சென்றார். இது வைப்பு நிதியின் சக்தியை நிரூபிக்கிறது. இந்த 33 லட்ச ரூபாய்க்கும் வருமான வரி இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

நமது வைப்பு நிதி மிகச் சிறந்த டிரஸ்டிகளாலும், அதிகாரிகளாலும் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. உயர்ந்த நம்பகத் தன்மை கொண்டது. மேற்சொன்ன நபருக்கு சுமார் 15% கூட்டு வட்டியாக அளித்திருக்கிறது. இத்தகைய சிறப்பான டஊ நிதியை நாம் சரியாகப் பயன்படுத்திட வேண்டும். அதாவது நல்ல ஒரு மழை நாளில் வீட்டின் சமையலறை, படுக்கையறை ஒழுகி, குளியலறை ஒழுகாமல் இருக்கிறது என்பதற்காக குளியலறையில் சமைப்போமா? சாப்பிடுவோமா? அல்லது படுப்போமா?

ஆகவேதான், எவ்வளவு அவசரத் தேவையானாலும், நம் ஓய்வு காலத்தை, வயோதிக காலத்தைப் பணயம் வைத்து நிலைமையைச் சமாளிக்கக் கூடாது. முதுமையில் நோய் தவிர்க்க முடியாதது. நோயுடன் வறுமையும் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிவிடும். ஆத்திச்சூடி, ``இளமையில் வறுமை கொடிது'' என்கிறது. அது கூட்டுக் குடும்பக் காலம். உறவுகளின் அருமை உணர்ந்த காலம். பிறர் நலம் குறித்த அக்கறை கொண்ட காலம். இன்றோ மனித நேயம் சிறிது சிறிதாக மடிந்து வரும் வேளையில் ``முதுமையில் வறுமை கொடிதினும் கொடிது''. இதைத் தவிர்ப்போமா? மாட்டோமா? உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா