Wednesday, 1 August 2012

ACCL தொழிலாளியின் உரிமைக்குரல் | கவிதை



கவிஞர் க.சுந்தரமூர்த்தி
ACCL கும்மிடிப்பூண்டி

தொழிலாளர் வர்க்க ஒற்றுமை ஓங்க வேண்டும்!
பலவித அமைப்பு பேதங்கள் நீங்க வேண்டும்!
எதிர்ப்பு வாதமே நிர்வாகத்தை எதிர்த்து தான்
மீட்க வேண்டுமே... பாட்டாளி உரிமைகள்!

வீறு கொண்டு எழு தோழா வா! வா!
வேதனை யாவையும் மாற்றலாம் நீ வா!
ஓர் அணியாக திரண்டு எழுகவே!
உரிமைகள் பறிபோவது தடுக்கவே!

நன்மை அடையும் சிந்தனை நாம் வளர்க்க வேண்டும்
நாளும் அதற்கு தலைமையை ஏற்க வேண்டும்
புற்றீசல் போல கிளம்பி நீ வா வா!
புதிதாக சரித்திரம் படைப்போம் வா வா!

உழைக்கும் கைகளை நம்பி தான் உலகம் வாழுது!
உழைப்பவன் வாழ்வு உயரவே கிழக்கும் சிவக்குது!
நிர்வாக கோளாறை நிர்வாகமே களைந்திடு!
நீயாக மாறு! இல்லையேல் யோசனை எங்களைக் கேளு!

யுக்திகளை புகுத்து விரயங்களைத் தடுத்து
திட்டங்களை வகுத்து தெளிவான நடைமுறைப்படுத்து!
மாற்று வேலை கொண்டு வா! மறுமலர்ச்சி காண்போம்!
லாபம் ஈட்டுவோம்! நிறுவனத்தை உச்சத்தில் உயர்த்துவோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா