Wednesday, 1 August 2012

வாழ்த்துச் செய்தி | B.அய்யாத்துரை | கவிதை


B.அய்யாத்துரை - பணி நிறைவு
உரிமைக்குரல் முன்னாள் ஆசிரியர்




உரிமைக்குரலே!

அன்று வர்க்க எதிரிகள் உன்னை
கேலியாக நினைத்த போதும்
நீ என்றும் உண்மையாய் தானிருந்தாய்!

இன்றும்.... கிழிந்த வாழ்க்கையை உடுத்திக் கொண்டிருக்கும்
            கிராமத்துக் கூலிகளாய்...

மறுபுறம்... எந்திரங்களின் பற்களை இயக்கும்
            நவீனத் தொழிலாள அடிமைகளாய்...

நிலைமை இப்படி இருக்கையிலே...

சமூக ஜனநாயக காவலன் போல்
வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு
நம்மை இருட்டில் கிடத்தும்
புதியப் பொருளாதாரக் கொள்கைகள்!

வர்க்க வேர்களை விசாரிக்கத்
தூண்டிடும் உரிமைக்குரலே! உனை
ஒன்பதாம் ஆண்டு பிறந்த நாளில்

உளமாற நானும் வாழ்த்துகின்றேன்.
 

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா