Wednesday, 1 August 2012

நமது தொழிலகம் "அசோக் லேலண்ட்" - வரலாறு - ஒரு பார்வை



R.பத்மநாபன் 261\L054
தலைவர், உழைப்போர் உரிமைக்கழகம்



      நமது நிறுவனம் 1948ல் ``ஆஸ்டின்'' மாடல் கார்கள் உற்பத்தி செய்யும் ஒரு ஆலையாக முதன் முதலில் எண்ணூரில் உருவானது. பிறகு 1950ல் வியாபார ரீதியான கமர்சியல் வண்டிகள் உற்பத்தி துவங்கப்பட்டது. அப்போது உதிரி பாகங்கள் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வண்டிகளில் பொருத்தப்பட்டு வண்டிகள் உற்பத்தியானது. 1967ல் டபுள் டெக்கர்  வண்டிகளும், 1970ல் காமெட் வகை என்ஜின்களும் மற்றும் ஏஎட வகை வண்டிகளும் 4 ஷ் 4, 6 ஷ் 4 டிராக்டர் மாடல் வண்டிகளும் உருவானது. 1976ல் பயணிகள் வண்டி வைக்கிங் உற்பத்தி துவங்கியது. பிறகு 1980களில் நமது நிறுவனம் விரிவாக்கம் செய்யப்பட்டு ஓசூரில் புதிய கிளை துவங்கியது. 1981ல் எண்ணூரில் சீட்டா வகை பயணிகள் வண்டி உற்பத்தி செய்யப்பட்டது. 1982ல் ஆள்வார், பந்தாரா என கிளைகள் உருவாயின.

      1982ல் நவீன கப்ளிங் (இர்ன்ல்ப்ண்ய்ஞ்) பஸ்கள் (யங்ள்ற்ண் க்ஷன்ப்ங் க்ஷன்ள்) உருவாக்கப்பட்டது. 1987ல் இந்துஜா குழுமம் ஆலையை வாங்கியது. 1996_97ல் பல புதிய மாடல்களும், நவீன தொழில் நுட்பங்களும் புகுத்தப்பட்டன. 2002ல் உஈஇ எலக்ட்ரிக் டிவைஸ் பொருத்திய மாடல்கள் உருவாயின. டன்ய்ஸ்ரீட்ங்க் ச்ழ்ஹம்ங், வெவலர் மாடல் வண்டிகள் 1997ல் ஸ்டாலின் வகை ராணுவ வண்டிகள் உருவானது. 2010ல் பந்த் நகரில் நமது நிறுவனத்தின் புதிய யூனிட் உருவானது. எல்லா யூனிட்களிலும் சேர்த்து வண்டிகள் உற்பத்தி ஆண்டுக்கு 1,00,000 என்ற இலக்கு வெற்றிகரமானது.

      2011ல் தோஸ்த் வண்டிகளும், 2012ல் ஜன்பஸ் (ஒஹய் ஆன்ள்) என்ற  இன்ஜின் முன்னால் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வண்டிகளும், 4 அச்சு மல்டி ஆக்சில்கள், 5 அச்சு ஆக்சில்களாக கூடுதல் பளுவை ஏற்றும் வகையில்  வண்டிகளும், 12 மீட்டர் நீள பயணிகள் வண்டிகளும், ஸ்டேக், லின்ங்ஸ் (கஹ்ய்ஷ்), பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாடல்கள் செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர் விரும்பும் வண்ணம் புதிய மாடல்கள் வடிவமைக்கப்படுகிறது.

      வண்டிகளை இலகுவாக இயக்குவதற்கும், சொகுசாக செல்வதற்கும் உலகம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் நமது நிறுவனம் பல்வேறு வகையான மாடல்கள் செய்யும் வெற்றிகரமான நிறுவனமாக மாறியுள்ளது. உலக அரங்கில்  லேலண்ட் வண்டிகளின் அந்தஸ்து பன்மடங்கு உயர்ந்துள்ளதற்குக் காரணம் நமது தொழிலாளர்களின் உழைப்பும், அனைவரின் ஒத்துழைப்பும், உயர்ந்த சிந்தனையுமே! பில்லியன் டாலர் கம்பெனியாக நன்மதிப்பைப் பெற்றுள்ள நமது நிறுவனம் தொழிலாளர்களையும், அவர்தம் குடும்பத்தினரையும் சமூகத்தில் மேன்மையடையச் செய்யும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொழிலாளர்கள் விருப்பம். அதைக் கண்டிப்பாக நிறுவனம் நிறைவேற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா