S.கெஜராஜ்
375\K700
375\K700
அடியெடுத்து
வைத்தாகிவிட்டது ஒன்பதாம் ஆண்டு அருமை!
ஆயிரமாயிரம்
வாசகர்கள் அடைந்தனர் பெருமை!
இயல்பாய்
கருத்துகள் கூறுவதில் இனிமை!
உழைப்பாளர்களே
படைத்திட்ட இதழில் திறமை!
ஊன்றுகோலாய்
உதவுவதில் பாட்டாளிகளுக்கு நன்மை!
எண்ணங்களைப்
பிரதிபலிக்கும் புதிய படைப்பாளியின் வலிமை!
ஏற்றமிகு
ஆசிரியர்களின் இதழ் தொகுப்பில் எளிமை!
ஐக்கியமாய்
இருந்து புதியன புகுத்துவதில் புதுமை!
ஒவ்வொன்றாய்
புள்ளிவிவரங்களோடு உரைப்பதில் உண்மை!
ஓங்கி
``உரிமைக்குரல்'' ஒலிப்பதில் வாய்மை!
ஔடதமாய்
தொழிலாளர் நலன் கருதுவதில் நேர்மை!
எஃகு
போல் உறுதியாய் இருப்பதால் ``வாழ்த்துகிறோம்'' _ உம்மை!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா