Wednesday, 1 August 2012

மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன் | கவிதை



E.சுரேஷ்குமார்
254\38190


பல இதழ்களைக் கொட்டி
சுதந்திரமாய் வரும் மலரே!
இனி நீ மேலும் பெருகி வளர என் வாழ்த்துக்கள்!

விதையாய் மட்டுமல்ல.... (க) விதையாய் தூவுகிறேன்!
எட்டாம் திங்களில் ஒன்பதாம் மலராய் வந்தாலும்
தித்திக்கும் இனியவனைப் போல் பல சுவை தருகின்றாய்!
திக்கற்று தவிப்போர்க்கு ``டில்லி''யின் மருந்து தருகின்றாய்!

இந்த இதழ் வாசனை வேண்டாம் என நினைத்தோரும்
இன்று மகிழ்வோடு வாங்கி முகரும் சாதனை படைத்தாய்!

சுட்டெரிக்கும் கோடை வெயிலை மறந்தாலும்
உதிக்கும் சூரியனை என்றும் மறவாத மலரே!

மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா