Wednesday, 1 August 2012

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் | கவிதை



M. பழனியப்பன்
760\K835

செல்வந்தர் பலருமே சிறையில்
சித்திரவதைப்பட்டேதான்
சுதந்திரத்தைப் பெற்றனர்.

அளவில்லா உயிர்கள் அழிந்தேதான்
அல்லல் மிகவும் அடைந்தேதான்
அடைந்தனர் சுதந்திரத்தை

பரங்கியர் ஆட்சியை விரட்டவே
படித்தோர் பலரும் பாடுபட்டே
பிறந்த நாட்டை மீட்டனர்

கடின உழைப்பின் கனியை
தேவையெனப் பெற்றச் சுதந்திரத்தை
தீவிரவாத செயலினால்
அழிந்து போக விடலாமா?

மகான்கள் நடத்திய போராட்டங்களை
மனதிலே நினைத்திட்டால்
மறக்கமாட்டோம் சுதந்திரத்தை

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரமென
சிந்தைதனில் நினைத்திட்டால்
சிறப்பாய் காத்திடுவோமதை என்றுமே

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா