Wednesday, 1 August 2012

நவீன அறிவியலின் சிற்பி - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்



C.தவமணி
268/36971

      நவீன அறிவியல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அறிவியல் சாதனைகளும் நாகரீகமும் மின்னல் வேகத்தில் முன்னேறியது. அசுர வேகத்தில் ஏற்பட்ட அறிவியல் புரட்சியால் மிக நுண்ணிய அணு முதல் பரந்து விரிந்த அண்டம் வரை அதன் இயக்கங்கள் பற்றியும் அதன் காரணங்கள் பற்றியும் அறிய முடிந்தது. இத்தகைய நவீன அறிவியலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எனலாம்.

      1879_ம் ஆண்டு மார்ச் மாதம் 14_ம் தேதி ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள உல்ம் என்ற நகரில் ஐன்ஸ்டீன் பிறந்தார். தாமதமாகவே பேசும் திறனைப் பெற்ற ஐன்ஸ்டீன், சர் ஐசக் நியூட்டன் கோட்பாடுகளையே ஆட்டம் காணச் செய்வார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

      சிறுவயதில் உறவுக்காரர் ஒருவர் அவருக்கு திசை காட்டும் கருவி ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். சிறுவன் ஐன்ஸ்டீன் தன் கையில் கிடைத்த அத்திசைக்காட்டும் கருவியைத் திருப்பி திருப்பிப் பார்த்தார். எப்படித் திருப்பினாலும் வடக்கு திசையையே நோக்கும் முள்ளின் செயல் அவர் மனதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. படிக்கும்போதும் பல கேள்விகள் எழுந்தன. கணித ஆசிரியரால் சோம்பேறி என வர்ணிக்கப்பட்ட ஐன்ஸ்டீன் பொறியியல் நுழைவுத் தேர்வில் தோல்வியுற்றார். பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி மறுக்கப்பட்ட நிலையில் காப்புரிமை அரசு அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்தார். அவருக்குத் திருப்புமுனையாய் 1905ம் ஆண்டு அமைந்தது.

      ஆம்! அந்த ஆண்டைத்தான் ஐன்ஸ்டீனின் அற்புத ஆண்டு என்கின்றனர். ஏனென்றால் 1905ம் ஆண்டு மார்ச் மாதம் அனலென்டர் பிசிக்ஸ் என்ற ஆய்வு இதழுக்கு ஐன்ஸ்டீன் முதல் கட்டுரையைச் சமர்ப்பித்தார். ஒளி மின்விளைவு (டட்ர்ற்ர் உப்ங்ஸ்ரீற்ழ்ண்ஸ்ரீ உச்ச்ங்ஸ்ரீற்) என்பதைக் குறித்தது இந்தக் கட்டுரை. அடுத்ததாய் அவர் சமர்ப்பித்த அணுக்களின் சலனம் குறித்த கட்டுரை நவீன அறிவியல் அறிவுக்கு அடித்தளம் அமைத்தது. மூன்றாவதாய்... சார்பியல் தத்துவம் (நல்ங்ஸ்ரீண்ஹப் பட்ங்ர்ழ்ஹ் ர்ச் தங்ப்ஹற்ண்ஸ்ண்ற்ஹ்) கட்டுரையைச் சமர்ப்பித்தார். அது வரையில் பிரபஞ்சம் எந்திரவியல் தன்மை வாய்ந்தது என்ற கூற்றை மறுத்து, பிரபஞ்சம் சார்பு நிலை தன்மை வாய்ந்தது என்பதை அந்தக் கட்டுரைக் கூறியது.

      காலம் (பண்ம்ங்) என்பது உள்ளபடியே வெளி (நல்ஹஸ்ரீங்) முழுமைக்கும் பொதுவானதல்ல. அந்தந்த இயற்பியல் நிலை சார்ந்து காலம் வேறுபட்டு அமையும் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது. அடுத்தபடியாக உலகிலேயே பிரசித்தி பெற்ற E=Mc2 சூத்திரத்தை விளக்கியது இக்கட்டுரை. உ என்பது உய்ங்ழ்ஞ்ஹ் ஆற்றல் M = Mass நிறை C என்பது  இங்ப்ங்ழ்ண்ற்ஹள் ஒளியின் வேகம். இது கிரேக்க மொழியில் அமைந்துள்ளது. அதுவரையில் காப்புரிமை அலுவலகத்தில் பணிபுரிந்த ஐன்ஸ்டீன் இக்கட்டுரை வெளியான அடுத்த ஏழு மாதங்களில் புகழின் உச்சிக்குச் சென்றார்.

(ஐன்ஸ்டீன் தொடர்வார்)

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா