Wednesday, 1 August 2012

நம்மைச் சிந்திக்க வைக்கும் சில வரிகள் | கவிதை



V.கோவிந்தசாமி,
352/K302, Mechanical Maintenance

மகாத்மா காந்தி
மீண்டும் பிறக்க வேண்டும்
ராட்டையோடு அல்ல...

சாட்டையோடு!
லாரியில் மணல்
கசியும் நீர்
ஆற்றின் கண்ணீர்

மலர மலர
வாடுகிறது
பூக்காரியின் முகம்!

அன்று
அறிவுப் பசியைத்
தீர்த்த புத்தகங்கள்
இன்று
வயிற்றுப் பசியைத்
தீர்க்க நிற்கின்றன
தராசில் விற்பனைக்காக

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா